Home /News /entertainment /

சந்தானம் நடித்திருக்கும் குலு குலு படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சந்தானம் நடித்திருக்கும் குலு குலு படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சந்தானம்

சந்தானம்

இந்த திரைப்படத்தை இயக்கியுள்ள ரத்னகுமார், விஜய் நடித்த மாஸ்டர், கமல் நடித்த விக்ரம் ஆகிய திரைப்படங்களுக்கு வசனம் எழுதி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

  • News18
  • Last Updated :
சந்தானம் நடித்திருக்கும் குலு குலு திரைப்படம் ஜூலை 29 ஆம் தேதி வெளியாகிறது. 

மேயாத மான், ஆடை ஆகிய திரைப்படங்களை இயக்கிய ரத்னகுமார் இயக்கத்தில் நடிகர் சந்தானம் குலு குலு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.  நகைச்சுவை ஃபார்முலாவில் இந்த திரைப்படம் எடுக்கப்பட்டு இருக்கிறது. சந்தோஷ் நாராயணனின் இசையமைக்கிறார்.

இந்தப் படத்திற்கான அனைத்து வேலைகளும் முடிவடைந்து வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. இதனால் படத்தை திரைக்கு கொண்டு வரும் வேலையில் தயாரிப்பு நிறுவனம் ஈடுபட்டுள்ளது. அதிலும் வரும் 29ஆம் தேதி படத்தை வெளியிடுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கின்றனர்.



Also read... சாய்பல்லவி மீதான நோட்டீசை ரத்து செய்ய முடியாது - தெலங்கானா உயர்நீதிமன்றம்

இதை அடுத்து டீசர் மற்றும் ட்ரெய்லரை விரைவில் வெளியிட திட்டமிட்டு இருக்கின்றனர். குறிப்பாக படத்தின் டீசர் தயார் நிலையில் உள்ளது. இதனால் ஓரிரு நாட்களில் குலு குலு படத்தின் டீசர் வெளியாகிறது.

இந்த திரைப்படத்தை இயக்கியுள்ள ரத்னகுமார், விஜய் நடித்த மாஸ்டர், கமல் நடித்த விக்ரம் ஆகிய திரைப்படங்களுக்கு வசனம் எழுதி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Actor Santhanam

அடுத்த செய்தி