‘டிக்கிலோனா’ படத்தில் சந்தானத்தின் மகன் நடிக்கிறாரா? படக்குழு பதில்

‘டிக்கிலோனா’ படத்தில் சந்தானத்தின் மகன் நடிக்கிறாரா? படக்குழு பதில்
சந்தானம்
  • Share this:
‘டிக்கிலோனா’ படத்தில் நடிகர் சந்தானத்தின் மகன் நடிக்க இருப்பதாக வெளியான தகவல் குறித்து படக்குழு விளக்கமளித்துள்ளது.

தமிழ் சினிமாவின் காமெடி மன்னனாக வலம் வந்த நடிகர் சந்தானம், கடந்த சில ஆண்டுகளாக ஹீரோவாக நடித்து வருகிறார். தற்போது அவர் நடிப்பில் டிக்கிலோனா என்ற படம் உருவாகி வருகிறது. மூன்று கேரக்டரில் சந்தானம் நடிக்கும் இந்தப் படத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங்கும் முக்கியமான கதாபாத்திரமொன்றில் நடிக்கிறார்.

கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தை கார்த்திக் யோகி இயக்குகிறார். இந்நிலையில் இந்தப் படத்தில் நடிகர் சந்தானத்தின் மகன் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகின. இதுகுறித்து படக்குழுவைத் தொடர்பு கொண்டு கேட்ட போது டிக்கிலோனா படத்தில் அவருக்கான கதாபாத்திரமே இல்லை என்றும், அது வெறும் வதந்தி என்றும் மறுத்தனர்.


மேலும் படிக்க: அஜித்தின் ‘வலிமை’ பட ஹீரோயின் அப்டேட்!

ஆனால் சந்தானத்தின் அடுத்த படங்களில் அவரது மகன் நடிக்கலாம் என்று கூறப்படுகிறது. தமிழ் சினிமாவில் நடிகர்களின் வாரிசுகள் அறிமுகமாவது வழக்கமான ஒன்றாகவே இருந்து வருகிறது. சமீபத்தில் நடிகர் விஜய்சேதுபதியின் மகன் சிந்துபாத் படத்திலும், ஜெயம் ரவியின் மகன் ஆரவ் டிக் டிக் டிக் படத்திலும், கருணாஸின் மகன் அசுரன் திரைப்படத்திலும் நடித்திருந்த நிலையில் விரைவில் சந்தானத்தின் மகன் என்ட்ரி ஆவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also see:
First published: December 9, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்