• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Sabhaapathy Movie Trailer : வயிறு குலுங்க சிரிக்க வைக்க வரும் சந்தானம்.. வெளியானது ’சபாபதி’ ட்ரைலர்..

Sabhaapathy Movie Trailer : வயிறு குலுங்க சிரிக்க வைக்க வரும் சந்தானம்.. வெளியானது ’சபாபதி’ ட்ரைலர்..

சந்தானம்

சந்தானம்

Santhanam Sabhaapathy Movie Trailer : சபாபதி திரைப்படம் நவம்பர் 19 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

  • Share this:
    தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக அறிமுகமானவர் சந்தானம்.இவர் நகைச்சுவை நடிகராக நடித்த பல படங்களை இன்று பார்த்தாலும் வயிறு குலுங்க சிரிக்கலாம். நகைச்சுவை தான் தனது பலமென உணர்ந்த சந்தானம், ஹீரோவாக நடிக்க தொடங்கிய பின்பு நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளையே தேர்வு செய்தார்.

    அந்த வகையில் 2014 ஆம் ஆண்டு வெளியான ‘வல்லவனுக்கு புள்ளும் ஆயுதம்’ என்ற படம் மூலம் ஹீரோவாக அறிமுகமனார். படத்தின் தயாரிப்பாளும் அவரே. அதையடுத்து இனிமே இப்படித்தான், தில்லுக்கு துட்டு, சக்க போடு போடு ராஜா, தில்லுக்கு துட்டு 2 ஆகிய படங்களில் நடித்தார். 2019 ஆம் ஆண்டு வெளியான A1 திரைப்படம் மிகுந்த வெற்றிப்பெற்றது.

    ஆனால் அதன் பின்பு வெளியான டகால்டி, பிஸ்கோத் ஆகிய படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.பாரிஸ் ஜெயராஜ் படம் மூலம் மீண்டும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.சமீபத்தில் சந்தானம் நடிப்பில் ‘டிக்கிலோனா’ திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் இடம்பெற்ற ரீமேக் பாடலான ‘ பெயர் வச்சாலும்’ பாடல் அனைவரின் ஃபேவரெட்டாக உள்ளது.

    also read :  'அந்தரத்தில் பறக்கும் பைக்குகள்'.. வைரலாகும் வலிமை படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் படங்கள்..

    இந்நிலையில் நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள ‘ சபாபதி’ படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகிவுள்ளது.


    படத்தில் ஊர்வசி, புகழ், முனிஸ்காந்த், மதுரை முத்து உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை ஸ்ரீனிவாசா ராவ் இயக்கிவுள்ளார். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். சபாபதி திரைப்படம் நவம்பர் 19 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Tamilmalar Natarajan
    First published: