• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • சந்தானத்தின் சபாபதி திரையரங்கில் வெளியாவது உறுதி - தேதி அறிவிப்பு

சந்தானத்தின் சபாபதி திரையரங்கில் வெளியாவது உறுதி - தேதி அறிவிப்பு

சபாபதி

சபாபதி

சபாபதியின் பர்ஸ்ட் லுக்கை இந்த வருடம் ஜனவரியில் சந்தானத்தின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிட்டனர்.

  • Share this:
    சந்தானத்தின் டிக்கிலோனா ஓடிடியில் வெளியான நிலையில், பல வருடங்களாக அண்டர்புரொடக்ஷனில் இருக்கும் சர்வர் சுந்தரம், சபாபதி படங்கள் திரையரங்கில் வெளியாகுமா இல்லை ஓடிடியா என்ற கேள்வி இருந்தது. இதில் சபாபதி படம் நவம்பரில் திரையரங்கில் வெளியாகும் என அறிவித்தனர். படத்தின் தமிழக விநியோக உரிமையை கோபுரம் பிலிம்ஸ் வாங்கியதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியானது.

    சபாபதியின் பர்ஸ்ட் லுக்கை இந்த வருடம் ஜனவரியில் சந்தானத்தின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிட்டனர். ஸ்ரீனிவாச ராவ் படத்தை இயக்கியிருந்தார். சாம் சி.எஸ். இசை. சமீபத்தில் பெண்ணே பெண்ணே... எனத் தொடங்கும் பாடலை வெளியிட்டனர். இந்நிலையில், படம் ஓடிடியில் வெளியாகலாம் என வதந்தி கிளம்பியது. அதற்கு பதில் சொல்லும் வகையில் படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டனர்.

    இதில், படத்தின் ட்ரெய்லர் 10-ஆம் தேதி நாளை வெளியாகும் என குறிப்பிட்டுள்ளனர். அதேபோல் நவம்பர் 19-ம் தேதி படம் திரையரங்குகளில் வெளியாகும் என்றும் குறிப்பிட்டுள்ளனர். அதே தேதியில் அருண் விஜய் நடித்த பார்டர் திரைப்படமும் திரைக்கு வருவதாக அறிவித்துள்ளனர்.

    சந்தானம் தற்போது ஏஜென்ட் கண்ணாயிரம் என்ற படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கில் வெற்றி பெற்ற ஏஜென்ட் சாய் ஸ்ரீனிவாச ஆத்ரேயா படத்தின் தமிழ் தழுவல் இது. யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைக்க, மனோஜ் பீத்தா படத்தை இயக்குகிறார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: