ஹாட்டான போஸ்டர் வெளியிட்டு ஷாக் கொடுத்த சந்தானம்

நடிகர் சந்தானம் நடித்துள்ள டிக்கிலோனா படத்தின் இரண்டாவது லுக் வெளியிடப்பட்டுள்ளது.

ஹாட்டான போஸ்டர் வெளியிட்டு ஷாக் கொடுத்த சந்தானம்
டிக்கிலோனா பட செகண்ட் லுக்
  • Share this:
சந்தானம் 3 கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் டிக்கிலோனா. கார்த்திக் யோகி இயக்கும் இந்தப் படத்தை பலூன் பட இயக்குநர் சினிஷ் தயாரிக்க கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

இந்தப் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடிக்கிறார். மேலும் ஆனந்தராஜ், முனீஸ்காந்த், மொட்டை ராஜேந்திரன், யோகி பாபு, அனகா, ஷிரின் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். இத்திரைப்படத்துக்கு யுவன் சங்கர்ராஜா இசையமைத்திருக்கிறார்.

படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில் 3 நாட்களுக்கு சந்தானத்தின் 3 கேரக்டரின் லுக்கை வெளியிட படக்குழு முடிவு செய்தது.


அதன்படி நேற்று ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட நடிகர் சந்தானம் இன்று இரண்டாவது லுக்கை வெளியிட்டுள்ளார். அதில் நடிகர் சந்தானம் ஆடையின்றி ஹாட் என்ற வாசகம் எழுதப்பட்ட தோசைக் கல்லுடன் தோன்றியுள்ளார். இதுவரை சந்தானம் நடித்து வெளியான போஸ்டர்களிலேயே இது வித்தியாசமாக அமைந்துள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.



டிக்கிலோனா படத்தின் படப்பிடிப்பு முழுவதும் சென்னையைச் சுற்றியே நடந்ததாகவும் ஒரு சில காட்சிகள் மட்டும் அரங்கு அமைத்து எடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

மேலும் படிக்க: சினிமா மட்டுமல்ல சின்னத்திரையிலும் அட்ஜஸ்மெண்ட் செய்ய கேட்டார்கள் - பகீர் பாலியல் புகார் சொன்ன நடிகை








First published: May 28, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading