டிக்கிலோனா ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்; 3 கதாபாத்திரங்களில் சந்தானம்

டிக்கிலோனா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.

டிக்கிலோனா ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்; 3 கதாபாத்திரங்களில் சந்தானம்
டிக்கிலோனா ஃபர்ஸ்ட் லுக்
  • Share this:
நடிகர் சந்தானம் நடித்துள்ள டிக்கிலோனா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.

சந்தானம் 3 கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் டிக்கிலோனா. கார்த்திக் யோகி இயக்கும் இந்தப் படத்தை பலூன் பட இயக்குநர் சினிஷ் தயாரிக்க கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

இந்தப் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடிக்கிறார் . மேலும் ஆனந்தராஜ், முனீஸ்காந்த், மொட்டை ராஜேந்திரன், யோகி பாபு, அனகா, ஷிரின் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். இத்திரைப்படத்துக்கு யுவன் சங்கர்ராஜா இசையமைத்திருக்கிறார்.


படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில் நடிகர் சந்தானம் இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார். அதில் சந்தானத்தின் 3 கதாபாத்திரங்களும் இடம்பெற்றுள்ளன.

படப்பிடிப்பு முழுவதும் சென்னையைச் சுற்றியே நடந்ததாகவும் ஒரு சில காட்சிகள் மட்டும் அரங்கு அமைத்து எடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.



மேலும் படிக்க: மாரி செல்வராஜ் ஆகச் சிறந்த இயக்குநர்; கர்ணன் ரிலீசாகட்டும் கொண்டாடுவீங்க - பிரபல நடிகர் புகழாரம்








First published: May 28, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading