ஹிட் கொடுத்த இயக்குநருடன் மீண்டும் இணைந்த சந்தானம்!

ஹிட் கொடுத்த இயக்குநருடன் மீண்டும் இணைந்த சந்தானம்!
நடிகர் சந்தானம்
  • Share this:
சந்தானம் நடிக்க உள்ள புதிய படம் பூஜையுடன் தொடங்கியுள்ளது.

இயக்குநர் ஜான்சன்.கே இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் ‘A1’. இந்தப் படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. அதேபோல் படத்தின் நகைச்சுவைக் காட்சிகளும் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்தன.

இந்நிலையில் இந்தக் கூட்டணி மீண்டும் புதிய படத்தில் இணைந்துள்ளது. இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் ஒளிப்பதிவாளராக ஆர்தர்.கே.வில்சன் இணைந்துள்ளார். ‘A1’ படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்துக்கும் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.


இன்று இந்தப் படம் பூஜையுடன் துவங்கியுள்ளது. இதில் சந்தானம், இயக்குநர் ஜான்சன்.கே, 'நான் கடவுள்' ராஜேந்திரன் உள்ளிட்ட படக்குழுவினருடன் தயாரிப்பாளர் மதன் உள்ளிட்ட திரையுலகப் பிரமுகர்களும் கலந்து கொண்டனர். லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பாக கே.குமார் இந்தப் படத்தை தயாரிக்கவுள்ளார்.

முன்னதாக சந்தானம் நடித்துள்ள டகால்டி, சர்வர் சுந்தரம் ஆகிய 2 திரைப்படங்கள் ஜனவரி 31-ம் தேதி திரைக்கு வர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: மீசை, தாடியில்லாமல் விஜய் - வைரலாகும் மாஸ்டர் லுக்!
First published: January 20, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading