நடிகை சஸ்ருதிஹாசன் பல வருடங்களாக சாந்தனு ஹசாரிகா என்பவரை காதலித்து வருகிறார். இருவரும் விரைவில் திருமணம் செய்யப் போகிறார்கள் என்ற தகவல் கொஞ்ச நாட்களாகவே உலவிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் திருமணம் குறித்த கேள்விக்கு சாந்தனு சுவாரசியமான பதிலை அளித்திருக்கிறார்.
தனது வாழ்க்கையை திறந்த புத்தகமாக வைத்திருப்பவர் ஸ்ருதிஹாசன். மதுவுக்கு அடிமையாக இருந்ததையும் வெளிப்படையாக அவர் கூறியிருக்கிறார். தற்போது அதிலிருந்து மீண்டு மீண்டும் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அவரது நடிப்பில் பிரபாஸின் சலார் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. பாலகிருஷ்ணாவின் புதிய படத்தில் நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார். இதுதவிர இந்தியில் சில படங்களில் நடிக்கிறார்.
இந்நிலையில் திருமணம் குறித்து அவரது காதலர் சாந்தனு ஹசாரிகாவிடம் கேட்டதற்கு, நாங்க இப்போ தான் டேட்டிங் செய்ய ஆரம்பித்திருக்கிறோம். ஸ்ருதி நடிகை என்பதை விட அவர் ஒரு இசைக்கலைஞர். இசைதான் எங்களை ஒன்றிணைத்தது. இசையுடன், ஆடை வடிவமைப்பில் ஈடுபட்டு வருகிறோம், இந்த இரண்டும் எங்களது ஆக்கபூர்வமான பயணம். எங்களுடைய படைப்புகள் குறித்து விவாதிக்கிறோம். அது எங்களை ஊக்கப்படுத்துகிறது. இதுதான் தற்போது எங்களுக்கு இடையே இருக்கும் உறவு நிலை. திருமணத்தை விட இதில் தான் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறோம் என அவர் கூறியுள்ளார்.
Also read... Valimai review: வலிமை - ஹார்ட் கோர் அஜித் ரசிகர்களுக்கு மட்டும்
ஆக, திருமணம் குறித்து ஸ்ருதியும் சரி அவரது காதலரும் சரி யோசிக்கவே இல்லை என்பது இதன் மூலம் தெரியவந்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actress shruti Haasan