ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

விஜய்யின் தளபதி 67-ல் முக்கிய வில்லனாக பிரபல பாலிவுட் நடிகர்

விஜய்யின் தளபதி 67-ல் முக்கிய வில்லனாக பிரபல பாலிவுட் நடிகர்

லோகேஷ் கனகராஜ் - விஜய்

லோகேஷ் கனகராஜ் - விஜய்

இந்தத் திரைப்படம் பல வில்லன்களைக் கொண்ட ஒரு பான்-இந்திய ஆக்‌ஷன் என்டர்டெய்னராக உருவாகவிருக்கிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

நடிகர் விஜய்யின் தளபதி 67 படத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் வில்லனாக நடிப்பது உறுதியாகியிருக்கிறது. 

லோகேஷ் கனகராஜ் நடிகர் விஜய்யுடன் தனது அடுத்தப் படத்தை அறிவித்ததிலிருந்து, அதுவே டாக் ஆஃப் தி டவுனாக மாறியுள்ளது. தளபதி 67 என குறிப்பிடப்படும் இப்படத்தில் வில்லனாக சஞ்சய் தத் நடிப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், தளபதி 67 படத்தில் நடிக்க சஞ்சய் தத் மிகவும் ஆர்வமாக உள்ளதாகவும், அவர் ஏற்கனவே ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார் என்றும் படக்குழுவிற்கு நெருக்கமான வட்டாரம் டைம்ஸ் ஆஃப் இந்தியாவிடம் உறுதிப்படுத்தியுள்ளது.

"சஞ்சய் தத்தால் மட்டுமே இந்த கதாபாத்திரத்தை ஜஸ்டிஃபை செய்ய முடியும் என்று லோகேஷ் கனகராஜ் நம்புகிறார், ஏனெனில் இது ஒரு பவர்புல் பாத்திரம்" என்று தளபதி 67 படத்திற்கு நெருங்கிய வட்டாரம் தெரிவித்துள்ளது.

பாலிவுட் நடிகரான சஞ்சய் தத், சமீபத்தில் தனது முதல் தென்னிந்திய படமான கேஜிஎஃப்: 2-ல் நடித்தார். அதில் அவர் நடித்த அதீரா என்ற வில்லன் கதாபாத்திரம் பரவலாகப் பாராட்டப்பட்டது. தற்போது அவர் நடிகர் விஜய் படத்திலும் வில்லனாக நடிக்கப் போகிறார்!

தமிழ்-தமிழ்நாடு சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஏ.ஆர்.ரஹ்மானின் தரமான சம்பவங்கள்!

தளபதி 67 படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முக்கிய ஸ்டண்ட் காட்சிகள் அங்கு படமாக்கப்பட்டு வருகின்றன. இந்தத் திரைப்படம் பல வில்லன்களைக் கொண்ட ஒரு பான்-இந்திய ஆக்‌ஷன் என்டர்டெய்னராக உருவாகவிருக்கிறது. இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் நடிகர் நிவின் பாலி ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actor Thalapathy Vijay, Lokesh Kanagaraj