நடிகர் சஞ்சய் தத் ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யும் படத்தை, தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
தென்னிந்திய சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த பாலிவுட் நடிகர்களில் சஞ்சய் தத்தும் ஒருவர். முன்னதாக யாஷ் நடித்த 'கேஜிஎஃப்: அத்தியாயம் 2' திரைப்படத்தில் தென்னிந்திய ரசிகர்களை கவர்ந்த அவர், 'லியோ' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாக உள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார் சஞ்சய். கடின உழைப்பாளியான அவர், தொடர்ந்து ஜிம்மிற்கு சென்று வருகிறார். அவரது சமீபத்திய படம் அதை உறுதிப்படுத்துகிறது.
சஞ்சய் தத் 'லியோ' படத்தில் தனது கதாபாத்திரத்திற்காக தீவிரமாக தயாராகி வருகிறார். இந்தப் படத்தில் இடம்பெற்றிருப்பதில் மகிழ்ச்சியடையும் அவர், லியோ படத்தின் கதையை கேட்டதுமே ஒப்புக் கொண்டாராம். விரைவில் காஷ்மீர் படப்பிடிப்பில் சஞ்சய் தத் கலந்துக் கொள்வார் எனத் தெரிகிறது. காஷ்மீரில் 100-க்கும் மேற்பட்ட நடிகர்கள் மற்றும் படக்குழுவினருடன் 'லியோ' படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது.
Never underestimate the power of your mind!#MondayMotivation #DuttsTheWay pic.twitter.com/zse0bqFhZk
— Sanjay Dutt (@duttsanjay) February 20, 2023
கேங்ஸ்டர் ஆக்ஷன் படமாக உருவாகும் 'லியோ' தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் 19.10.2023 அன்று வெளியாக உள்ளது. 15 ஆண்டுகளுக்குப் பிறகு 'லியோ' படத்தில் விஜய்யுடன் மீண்டும் இணைந்துள்ளார் த்ரிஷா. இவர்களுடன் அர்ஜுன், ப்ரியா ஆனந்த், கவுதம் மேனன், மன்சூர் அலி கான், மிஷ்கின், மேத்யூ தாமஸ் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கும் இந்தப் படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்வது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actor Thalapathy Vijay