Home /News /entertainment /

விஜய்க்கு வில்லனாக நடிக்க நடிகர் சஞ்சய் தத்திற்கு இத்தனை கோடிகள் சம்பளமா?

விஜய்க்கு வில்லனாக நடிக்க நடிகர் சஞ்சய் தத்திற்கு இத்தனை கோடிகள் சம்பளமா?

விஜய் மற்றும் சஞ்சய் தத்

விஜய் மற்றும் சஞ்சய் தத்

விக்ரம் படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் விஜய்யின் 67வது படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்திற்கான திரைக்கதையை வடிவமைப்பதில் லோகேஷ் தற்போது தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    லோகேஷ் கனகராஜ் இயக்கும் விஜய்யின் 67 - வது படத்தில்  வில்லனாக பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடிக்க 10 கோடி வரை சம்பளம் பேசப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

    விக்ரம் படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் விஜய்யின் 67வது படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்திற்கான திரைக்கதையை வடிவமைப்பதில் லோகேஷ் தற்போது தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

    விஜயும் தற்போது நடித்து வரும் 'வாரிசு' படத்திற்கு பிறகு லோகேஷுடன் இணைகிறார். கேங்க்ஸ்டர் கதையை மையமாக கொண்டு உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு வரும் அக்டோபர் மாதம் தொடங்கும் எனக் கூறப்படுகிறது.

    விஜயின் 67- ஆவது படத்தில் அவர் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் கேங்ஸ்டராக நடிப்பார் என்று தகவல்கள் வெளிவந்தன. இந்த நிலையில் இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடிப்பார் என்பது ஏறக்குறைய உறுதி செய்யப்பட்டுள்ளது.

    Also read... திரையரங்கில் இந்த வாரம் வெளியாகும் படங்கள் ஒரு லிஸ்ட்!

    கே.ஜி.எஃப் 2 படத்தில் வில்லனாக அதிரா என்ற கேரக்டரில் சஞ்சய் தத் நடித்து பெரும் வரவேற்பை பெற்றார். தற்போது விஜயின் படத்தில் நடிக்க அவருக்கு ரூ.10 கோடி வரை ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், சால்ட் அன்ட் பெப்பர் லுக்கில் அவர் திரையில் தோன்றுவார் எனவும் தகவல்கள் கூறப்படுகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Actor Vijay, Entertainment, Lokesh Kanagaraj, Sanjay Dutt

    அடுத்த செய்தி