Home /News /entertainment /

கேஜிஎஃப் சேப்டர் 2 டப்பிங்கை முடித்த சஞ்சய் தத்

கேஜிஎஃப் சேப்டர் 2 டப்பிங்கை முடித்த சஞ்சய் தத்

சஞ்சய் தத்

சஞ்சய் தத்

இந்திய அளவிலான வியாபாரத்துக்கு இந்தி நடிகர்களை வில்லனாக்கும் போக்கு அதிகரித்தள்ளது.

கேஜிஎஃப் சேப்டர் 2 படத்தில் தனது காட்சிகளுக்கான டப்பிங்கை முடித்துள்ளார் சஞ்சய் தத்.

கேஜிஎஃப் சேப்டர் 1 படத்தின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது நாயகன் யாஷின் கம்பீரமான ஹீரோயிச நடிப்பும், அதற்கு இணையாக வெளுத்துக்கட்டிய வில்லன்களும். சேப்டர் 2-வில் யாரை வில்லனாகப் போடலாம் என யோசித்து கடைசியில் இந்தி நடிகர் சஞ்சய் தத்தை ஒப்பந்தம் செய்தனர். கேஜிஎஃப் போன்ற படங்களுக்கு சஞ்சய் தத் போன்று அஜானுபாகுவான வில்லன்கள் தான் வேண்டும்.

படம் முடிந்த நிலையில், தனது காட்சிகளுக்கான டப்பிங்கை சஞ்சய் தத் பேசி முடித்துள்ளார். அந்தப் படங்களை பகிர்ந்திருக்கும் இயக்குனர் பிரசாந்த் நீல் சஞ்சய் தத்துக்கு நன்றி கூறியிருப்பதுடன், அனைவரையும் ஏப்ரல் 14-ஆம் தேதி சந்திக்கிறோம் என குறிப்பிட்டுள்ளார். கேஜிஎஃப் சேப்டர் 2 2022 ஏப்ரல் 14-ஆம் தேதி திரைக்கு வருகிறது. முதல் பகுதியைப் போலவே இந்த கன்னடப் படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் டப் செய்து வெளியிடுகின்றனர்.

ஒருகாலத்தில் இந்தி சினிமா தான் இந்தியாவில் கோலோச்சியது. இப்போது பிற மொழிப் படங்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன. தங்களின் இந்திய அளவிலான வியாபாரத்துக்கு இந்தி நடிகர்களை வில்லனாக்கும் போக்கு அதிகரித்தள்ளது. 2.0 படத்தில் அக்ஷய் குமார் வில்லனாக நடித்தார். மலையாள லூசிபரில் விவேக் ஓபராய். கேஜிஎஃபில் சஞ்சய் தத். மரைக்காயரில் சுனில் ஷெட்டி. மகேஷ்பாபு நடிப்பில் த்ரிவிக்ரம் இயக்கும் படத்துக்கும் சஞ்சய் தத்தை வில்லனாக்கும் முயற்சி நடந்து வருகிறது.

Sanjay Dutt completes his dubbing for KGF Chapter 2, kgf 2 release date, kgf yash, kgf 2 movie kgf 2, kgf 2 teaser, kgf 2 movie, kgf teaser record, கே.ஜி.எஃப் 2 ரிலீஸ் தேதி, கே.ஜி.எஃப் திரைப்படம், கே.ஜி.எஃப் யாஷ், kgf 2 full movie, kgf 2 release date on which platform, kgf 2 release date in india, kgf 2 release date and time, kgf 2 release date in tamil, kgf 2 trailer kannada, கேஜிஎஃப் ரிலீஸ், சஞ்சய் தத், நடிகர் சஞ்சய் தத்

மேலும் படிக்க - தலைவர் போட்டியில் வென்ற அமீர் - சலுகையை பயன்படுத்தும் பாவனி?

Sanjay Dutt completes his dubbing for KGF Chapter 2, kgf 2 release date, kgf yash, kgf 2 movie kgf 2, kgf 2 teaser, kgf 2 movie, kgf teaser record, கே.ஜி.எஃப் 2 ரிலீஸ் தேதி, கே.ஜி.எஃப் திரைப்படம், கே.ஜி.எஃப் யாஷ், kgf 2 full movie, kgf 2 release date on which platform, kgf 2 release date in india, kgf 2 release date and time, kgf 2 release date in tamil, kgf 2 trailer kannada, கேஜிஎஃப் ரிலீஸ், சஞ்சய் தத், நடிகர் சஞ்சய் தத்

இந்தி சினிமாவை பிற மொழிப் படங்கள் முந்திச் செல்வதின் அறிகுறிதான் இந்தி நட்சத்திரங்கள் பிற மொழிப் படங்களில் வில்லன்களாக நடிப்பது.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published:

Tags: Sanjay Dutt

அடுத்த செய்தி