Tamil Cinema: கேரக்டரை அசிங்கப்படுத்துவார்கள் - டாட்டூவை மறைத்த காரணத்தை வெளியிட்ட நடிகை!

சஞ்சனா கல்ராணி

அஜீஸ் பாஷாவை காதலிக்கும் போதே அவரது பெயரை முதுகில் பச்சை குத்திக் கொண்டிருக்கிறார் சஞ்சனா.

  • Share this:
    தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் நடித்து வரும் சஞ்சனா கல்ராணி சமீபத்தில் அஜீஸ் பாஷா என்பரை திருமணம் செய்து கொண்டார். இதுவொரு காதல் திருமணம்.

    அஜீஸ் பாஷாவின் பெயரை முதுகில் பச்சைக் குத்திக் கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் சஞ்சனா கல்ராணி பகிர்ந்துள்ளார். "என் இதயத்துக்கு நெருக்கமான டாட்டூவை வெளியிடுகிறேன். கிசுகிசுக்கள், கேரக்டரை அசிங்கப்படுத்தும் பேச்சுக்களை தவிர்க்கவே இத்தனை ஆண்டுகளாக இதை மறைத்து வைத்திருந்தேன். தற்போது நாங்கள் திருமணம் செய்து கொண்டதால் இதனை வெளியிடுகிறேன்" என்று அதில் சஞ்சனா கல்ராணி குறிப்பிட்டுள்ளார்.

    அவரது பயத்திலும் நியாயம் உள்ளது. சஞ்சனா ராக்கி கட்டிய சகோதரரை அவருடன் இணைத்து கிசுகிசு எழுதியிருக்கிறார்கள். இதனை குறிப்பிட்டிருக்கும் அவர், "நான் மனதளவில் எவ்வளவு தூரம் வருந்தியிருப்பேன். இது மனதளவில் பாதிப்பது இல்லையா?" என்று கேட்டுள்ளார். மேலும், "நமது நண்பர் பிரபல நடிகராகவோ, அரசியல்வாதியாகவோ, கிரிக்கெட் வீரராகவோ இருந்தால் அது நட்பையும் தாண்டிய உறவு என்று ஆதாரம் இல்லாமலே பேசுவார்கள். ஆயிரம் கதை கட்டுவார்கள். 2021-லும் இப்படி இருக்கிறார்கள் என்பது கவலையளிக்கிறது" என்று வருத்தப்பட்டுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    அஜீஸ் பாஷாவை காதலிக்கும் போதே அவரது பெயரை முதுகில் பச்சை குத்திக் கொண்டிருக்கிறார் சஞ்சனா. இத்தனை வருடங்கள் அதை மீடியா கண்ணில் படாமல் மறைத்திருக்கிறார். அதுவே சாதனை. கடந்த 15 வருடங்களில் நல்ல நண்பராக, காதலனாக, கணவராக, தந்தை போன்ற வழிகாட்டியாக தன்னுடன் அஜீஸ் இருப்பதற்கு ஆண்டவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக சஞ்சனா உருக்கமாக கூறியுள்ளார்..

    இதை வைத்து ஒரு சென்டிமெண்ட் சினிமாவே எடுக்கலாமே.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: