Home /News /entertainment /

ஷங்கர் குடும்பத்துடன் விருமன் FDFS பார்த்த நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விஜய்!

ஷங்கர் குடும்பத்துடன் விருமன் FDFS பார்த்த நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விஜய்!

சங்கீதா விஜய்

சங்கீதா விஜய்

இதற்கிடையே இயக்குநர் ஷங்கரின் மனைவி ஈஸ்வரி, மகள் அதிதி உள்ளிட்டவர்களுடன் சென்னை ரோகினி திரையரங்கில் விருமன் FDFS காட்சியைப் பார்த்துள்ளார் நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விஜய், இயக்குநர் ஷங்கர் குடும்பத்தினருடன் இணைந்து ‘விருமன்’ திரைபப்டத்தின் முதல் நாள் முதல் காட்சியைப் பார்த்துள்ளார்.

    இயக்குநர் முத்தையா இயக்கத்தில் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'கொம்பன்'. நடிகர் கார்த்தி நடித்திருந்த இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடித்திருந்தார். கிராமத்து கதையை மையப்படுத்திய இந்தப் படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து தற்போது ஏழு ஆண்டுகள் கழித்து 'விருமன்' படத்தின் மூலம் முத்தையா - கார்த்தி கூட்டணி இணைந்துள்ளது.

    சூர்யாவின் 2டி எண்டெர்டெயின்மெண்ட் தயாரித்துள்ள இந்தப் படத்தின் மூலம் இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் ஹீரோயினாக அறிமுகமாகிறார். தந்தை-மகன் உறவை மையப்படுத்தி இயக்கப்பட்டுள்ள விருமன் படத்தில், ராஜ்கிரண், சூரி, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

    பொன்னியின் செல்வன் பாடல் வெளியீட்டு விழாவில் கலந்துக் கொள்ளும் ரஜினி - கமல்?

    பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய விருமன் திரைப்படம் இன்று திரைக்கு வந்துள்ளது. படத்தைப் பார்த்தவர்கள் கலவையான விமர்சனங்களை கூறி வருகிறார்கள். இதற்கிடையே இயக்குநர் ஷங்கரின் மனைவி ஈஸ்வரி, மகள் அதிதி உள்ளிட்டவர்களுடன் சென்னை ரோகினி திரையரங்கில் விருமன் FDFS காட்சியைப் பார்த்துள்ளார் நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா. அந்த வீடியோவை தற்போது இணையத்தில் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள் விஜய் ரசிகர்கள்.



    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    நடிகர் விஜய்க்கு கடந்த 1999-ஆம் ஆண்டு, சங்கீதாவுடன் திருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவருக்கும் திவ்யா சாஷா மற்றும் சஞ்சய் என இரு பிள்ளைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Shalini C
    First published:

    Tags: Thalapathy vijay

    அடுத்த செய்தி