பிரபல பின்னணி பாடகி சங்கீதா சஜித் திடீரென மரணமடைந்துள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மலையாளம், தமிழ், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் பல பாடல்களை பாடியுள்ள சங்கீதா சஜித் இப்போது இல்லை. சிறுநீரகம் தொடர்பான நோயால் அவதிப்பட்டு வந்த அவர், திருவனந்தபுரத்தில் உள்ள தனது சகோதரி வீட்டில் நேற்று காலமானார். அவருக்கு வயது 46.
சமீபத்தில் பிருத்விராஜ் நடித்த குருதி படத்தின் தீம் பாடலைப் பாடிய சங்கீதா, சிறுநீரகம் தொடர்பான நோய்க்காக தனது சகோதரியின் வீட்டில் சிகிச்சை பெற்று வந்தார். சங்கீதா தென்னிந்தியத் திரைப்படங்களில் 200 பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார். மலையாளம், தமிழ், கன்னடம் மற்றும் தெலுங்கு திரைப்படத் துறைகளில் முக்கிய அங்கமாக விளங்கினார்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், மிஸ்டர் ரோமியோ படத்தில் சங்கீதா பாடிய தண்ணீரை காதலிக்கும் பாடல் நல்ல வரவேற்பை பெற்றது. அய்யப்பனும் கோஷியும் படத்தில் தாளம் போய் தப்பும் போய், காக்கக்குயில் படத்தில் அலரே கோவிந்தா ஆகியவை சங்கீதா குரலில் சமீபத்தில் பிரபலமான பாடல்கள்.
ஹீரோயின்களுக்கு டஃப் கொடுக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்... லைக்ஸை குவிக்கும் வீடியோ!
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
தமிழ்நாடு அரசு திரைப்பட விருது வழங்கும் விழாவில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் ‘ஞானப்பழத்தைப் பிழிந்து’ என்ற பாடலை பாடினார் சங்கீதா. தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியின்படி, அந்தப் பாடலில் மிகவும் ஈர்க்கப்பட்ட ஜெயலலிதா, அவருக்கு 10 சவரன் தங்க நெக்லஸை பரிசாக வழங்கினாராம்.
திருமணத்திற்குப் பிறகு ஆதி - நிக்கி கல்ராணியின் எமோஷனல் போஸ்ட்!
சங்சீதா சஞ்சித்தின் மறைவு இசை ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.