கவினு போர் அடிக்குதுடா... குழந்தையாக மாறி சாண்டி மாஸ்டர் வெளியிட்ட வீடியோ

பிக்பாஸ் வீட்டில் பள்ளி சிறுவராக மாறி மக்களை மகிழ்வித்த நடன இயக்குநர் சாண்டி தற்போது அதேபோல் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கவினு போர் அடிக்குதுடா... குழந்தையாக மாறி சாண்டி மாஸ்டர் வெளியிட்ட வீடியோ
சாண்டி மாஸ்டர்
  • Share this:
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடன இயக்குநராக பணியாற்றி பின்னர் ரஜினிகாந்த் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களுக்கு நடனம் அமைத்தவர் சாண்டி மாஸ்டர்.

கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்களிடம் நன்கு பரிச்சயமானார். சமூகவலைதளத்தில் ஆக்டிவ்வாக இருக்கும் சாண்டி தற்போது நகைச்சுவையான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் குழந்தையாக தோன்றியிருக்கும் சாண்டி மாஸ்டர் கவின், முகென், தர்ஷனிடம் போர் அடிப்பதாக கூறுகிறார். இந்த வீடியோ பதிவைப் பார்த்த தர்ஷன், முகென், நடிகர் மகத் உள்ளிட்டோர் தங்களது கமெண்ட்களை பதிவிட்டுள்ளனர். ஒரு சிலர் இதை எந்த வீடியோ செயலியை பயன்படுத்தி உருவாக்கினீர்கள் என்று சாண்டியிடம் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

 
View this post on Instagram
 

டேய்.. முகேனு, கவிணு, தர்ரு.. போர் அடிக்குதுடா..


A post shared by SANDY (@iamsandy_off) on


சமீபத்தில் விக்னேஷ் சிவன் - நயன்தாரா இருவரும் இதே போன்ற வீடியோவை வெளியிட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
First published: June 28, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading