Sandy Master: ’எங்க கிங் பொறந்துட்டான்’ - மகிழ்ச்சியில் சாண்டி!

பிக் பாஸ் சாண்டி

சாண்டியின் மனைவி சில்வியா கர்ப்பமாக இருக்கும் தகவல் வெளியனது. வளைகாப்பு நிகழ்ச்சியின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது.

  • Share this:
    நடன இயக்குனரும், பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் போட்டியாளருமான சாண்டி மாஸ்டருக்கு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது.

    தமிழ் சினிமாவில் நடன இயக்குனராக இருப்பவர் சாண்டி மாஸ்டர். நேற்று வெளியான சார்பட்டா பரம்பரை படத்திலும் பணிபுரிந்திருந்தார். அதோடு கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராகக் கலந்துக் கொண்டார். இறுதிப் போட்டி வரை சென்று ரன்னராக வெற்றி பெற்றார். சாண்டியின் மனைவி சில்வியா மற்றும் மகள் லாலா பிக்பாஸ் வீட்டுக்குள் வந்து ரசிகர்களை கவர்ந்தார்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.



     




    View this post on Instagram





     

    A post shared by SANDY (@iamsandy_off)






    சமீபத்தில் சாண்டியின் மனைவி சில்வியா கர்ப்பமாக இருக்கும் தகவல் வெளியனது. வளைகாப்பு நிகழ்ச்சியின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது. இந்நிலையில், தற்போது சில்வியாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதை சாண்டி மாஸ்டர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார்.

    இதையடுத்து ரசிகர்கள் சாண்டி - சில்வியா தம்பதிக்கு தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: