அழகான ‘சண்டக்காரி நீதான்’ பாடல் வீடியோ வெளியீடு

news18
Updated: September 13, 2019, 7:36 PM IST
அழகான ‘சண்டக்காரி நீதான்’ பாடல் வீடியோ வெளியீடு
விஜய் சேதுபதி
news18
Updated: September 13, 2019, 7:36 PM IST
சங்கத்தமிழன் படத்தில் இருந்து சண்டக்காரி நீதான் என்ற மெலடி பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

சிம்பு நடிப்பில் வெளியான வாலு, விக்ரம் நடிப்பில் வெளியான ஸ்கெட்ச் ஆகிய படங்களை இயக்கிய விஜய் சந்தர் தற்போது விஜய் சேதுபதியுடன் இணைந்து சங்கத்தமிழன் படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக ராஷிகண்ணா, மற்றும் நடிகை நிவேதா பெத்துராஜ் ஆகியோர் நடித்துள்ளனர்.

இவர்களுடன் நாசர், சூரி, அசுதோஷ் ராணா, ரவி கிஷான், ஜான் விஜய் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். விஜயா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் பி.பாரதி ரெட்டி தயாரித்து வருகிறார்.


படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது

இதையடுத்து விவேக்-மெர்வின் இசையில் விஜய் சேதுபதி மற்றும் ராஷி கண்ணா ஆகியோர் குத்தாட்டம் போட்ட கமலா பாடல் வெளியாகி ஹிட் அடித்தது.Loading...

இந்நிலையில் சண்டக்காரி நீதான் என்ற மெலடி பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த பாடலை இசையமைப்பாளர் அனிருத் பாடியுள்ளார்.முன்னதாக படம் தீபாவளியன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அக்டோபர் மாதம் முதல் வாரத்திலேயே வெளியாக வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Also watch

First published: September 13, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...