• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • மெரீனா பீச்சில் ஜோதிகாவுக்கு மணற்சிற்பம்!

மெரீனா பீச்சில் ஜோதிகாவுக்கு மணற்சிற்பம்!

ஜோதிகா மணற் சிற்பம்

ஜோதிகா மணற் சிற்பம்

புத்தாண்டு கிளாக் டவர் மற்றும் அசோக சக்கர அமைவிடத்திற்கு அருகே இந்த மணற்சிற்பம் அமைந்துள்ளது.

  • Share this:
    பிரபல நடிகை ஜோதிகாவின் 50-வது திரைப்படமான உடன்பிறப்பே இன்று வெளியாகியுள்ளது.

    அவரது சிறப்பான இந்த கலை பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லான இந்தப் படத்தைக் கொண்டாடும் வகையில் சென்னையின் பிரபலமான மெரினா கடற்கரையில் ஜோதிகாவின் ரசிகர்களும், பொது மக்களும் கண்டு மகிழ்வதற்கு, மக்கள் மனம் கவர்ந்த அவரது தனித்துவமான மணல் சிற்பத்தை பிரைம் வீடியோ உருவாக்கியிருக்கிறது.

    பன்முக திறமைகள் கொண்ட இந்த கலைஞரின் பாராட்டுக்குரிய இச்சாதனையை கௌரவிக்கும் வகையில், இந்த அற்புதமான கலைப்படைப்பு மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த சிறப்பான கலைப்படைப்பை நேரில் கண்டு ரசிப்பதற்கும், நடிகை ஜோதிகாவின் கலைப்பயண சாதனைகளை நினைவு கூர்ந்து அவரை வாழ்த்தவும் வகை செய்யும் வகையில் அக்டோபர் 17-ம் தேதி வரை, இந்த மணல் சிற்பம் மக்களின் வருகைக்காக பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கிறது.

    நவராத்திரி திருவிழாவையொட்டி வரும் இந்த வார இறுதி நாட்களில் எண்ணற்ற மக்கள் மெரினா கடற்கரைக்கு வருகை தரவிருக்கின்ற நிலையில் நடிகை ஜோதிகாவின் இரசிகர்கள் அதிக எண்ணிக்கையில் இந்த அமைவிடத்திற்கு நேரில் வருகை தர தொடங்கி விட்டனர். இந்த அற்புதமான கலைப்படைப்பை கண்டு ரசிப்பதற்காக இனி வரும் நாட்களிலும் ரசிகர்கள் இந்த அமைவிடத்திற்கு படையெடுப்பது நிச்சயம்.

    மெரினா கடற்கரையில், கலங்கரை விளக்கம் அருகே காமராஜர் சிலைக்கு பின்புறத்தில் – புத்தாண்டு கிளாக் டவர் மற்றும் அசோக சக்கர அமைவிடத்திற்கு அருகே இந்த மணற்சிற்பம் அமைந்துள்ளது.

    இரு உடன்பிறப்புகளுக்கு இடையேயுள்ள ஆழமான பிணைப்பை மிக நேர்த்தியாக எடுத்துக்கூறும் கதையாக உடன்பிறப்பே உருவாக்கப்பட்டிருக்கிறது. சிறப்பான நடிப்புத்திறன் கொண்ட ஜோதிகாவின் திரைப்பட கலைப்பயணத்தில் அவரது 50-வது திரைப்படமாக இது வெளிவருகிறது.

    இரா சரவணன் எழுதி, இயக்கியிருக்கும் இத்திரைப்படத்தில் ஜோதிகாவோடு, சசிகுமார், சமுத்திரகனி, சூரி மற்றும் கலையரசன் உட்பட பல திறமையான நடிகர்கள் இணைந்திருக்கின்றனர். அமேசான் ஒரிஜினல் திரைப்படமான இது, தெலுங்கு ரசிகர்களுக்காக ’ரக்தா சம்பந்தம்’ என்ற பெயரில் வெளியாகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: