சிம்பு பட ஹீரோயின் சனா கானுக்கு திடீர் திருமணம்

சிம்பு பட ஹீரோயின் சனா கானுக்கு  திடீர் திருமணம்

கணவருடன் நடிகை சனாகான்

நடிகை சனா கானுக்கு முஃப்தி அனஸ் என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது.

  • Share this:
தமிழில் ஜீவா நடிப்பில் 2006-ம் ஆண்டு வெளியான ‘ஈ’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து பின்னர் சிம்புவுக்கு ஜோடியாக சிலம்பாட்டம் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் சனா கான். அந்தப் படத்தைத் தொடர்ந்து தம்பிக்கு எந்த ஊரு, பயணம், ஆயிரம் விளக்கு உள்ளிட்ட சில படங்களில் நடித்த சனா கான், தெலுங்கு, இந்தி மொழிப் படங்களிலும் நடித்துள்ளார்.

மேலும் இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் அதிக ரசிகர்களைப் பெற்ற சனா கான், கடந்த ஆண்டு மெர்வின் லூயிஸ் என்பவரை காதலித்து வருவதாக அறிவித்தார். பின்னர் மெர்வின் தனக்கு துரோகம் செய்வதாகவும் அதனால் அவரைப் பிரிந்து விட்டதாகவும் தெரிவித்தார்.

கடந்த மாதம் சினிமாவில் இருந்து விலகுவதாக அறிவித்த சனா கானுக்கு குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்த முஃப்தி அனஸ் என்பவருடன் நேற்று திருமணம் நடைபெற்றுள்ளது. சூரத்தில் நடைபெற்ற சனா கான் - அனஸ் முஃப்தி திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். 
View this post on Instagram

 

A post shared by Sayied Sana Khan (@sanakhaan21)


அதற்கான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூகவலைதளத்தில் வைரலான நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருமண புகைப்படத்தை பதிவிட்டு அதை உறுதி செய்துள்ளார் சனா கான்.
அவரது பதிவைப் பார்த்த பலரும் திருமண வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
Published by:Sheik Hanifah
First published: