Home /News /entertainment /

தனுஷின் வாத்தி வதந்திகளுக்கு பதிலடி கொடுத்த சம்யுக்தா மேனன்!

தனுஷின் வாத்தி வதந்திகளுக்கு பதிலடி கொடுத்த சம்யுக்தா மேனன்!

சம்யுக்தா மேனன்

சம்யுக்தா மேனன்

சமூக வலைத்தளத்தில் சேலையில் தான் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, 'வாத்தி/ சார் என்னுடைய முதல்நாள்' என பதிவிட்டுள்ளார் சம்யுக்தா.

தனுஷின் இருமொழிப்படமான வாத்தியில் இருந்து நாயகி சம்யுக்தா மேனன் விலகிவிட்டார், வேறு நாயகியை ஒப்பந்தம் செய்கிறார்கள் என்ற வதந்திக்கு சத்தமில்லாமல் பதிலடி கொடுத்துள்ளார் சம்யுக்தா மேனன்.

நானே வருவேன் படத்தில் நடித்து வந்த தனுஷ், அப்படம் முடியும் முன்பே வெங்கி அட்லூரி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் தயாராகும் படத்தில் நடிக்கச் சென்றார். தமிழில் வாத்தி என்றும் தெலுங்கில் சார் என்றும் பெயர் வைக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கி தொடர்ந்து நடந்து வருகிறது.

முன்னதாக நடந்த பூஜையில் தனுஷ், சம்யுக்தா மேனன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் வாத்தியிலிருந்து சம்யுக்தா மேனன் விலகியதாக ஒரு வதந்தி உலவியது. அது வதந்திதான், அதில் உண்மையில்லை என நாம் நேற்று செய்தி வெளியிட்டிருந்தோம். இன்று அதனை சம்யுக்தா மேனனும் உறுதி செய்துள்ளார்.

சமூக வலைத்தளத்தில் சேலையில் தான் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, 'வாத்தி/ சார் என்னுடைய முதல்நாள்' என பதிவிட்டுள்ளார். இதன் மூலம் வாத்தியிலிருந்து விலகியதாக வெளியான வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் சம்யுக்தா மேனன்.

Samyuktha Menon puts an end to Dhanush's Vaathi rumors, samyuktha menon instagram picuki, samyuktha menon twitter, paavam ganesan samyuktha instagram, samyuktha menon facebook, samyuktha menon picuki, samyuktha menon fans instagram, samyuktha menon vaathi, சம்யுக்தா மேனன், சம்யுக்தா மேனன் வாத்தி, சம்யுக்தா மேனன் தனுஷ்

வாத்தி படப்பிடிப்பை இடைவெளி இல்லாமல் நடத்தி இந்த மாத இறுதிக்குள்ளேயே முடிக்க திட்டமிட்டுள்ளனர். இந்தப் படம் முடிந்த பின் தனுஷ் நானே வருவேன் படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published:

Tags: Actor dhanush

அடுத்த செய்தி