வேற லெவலில் நடனமாடி விஜய்க்கு பர்த்டே விஷ் சொன்ன நடிகை

நடிகர் விஜய்க்கு வித்தியாசமாக நடனமாடி வாழ்த்து சொல்லியுள்ளார் நடிகை சம்யுக்தா ஹெக்டே

வேற லெவலில் நடனமாடி விஜய்க்கு பர்த்டே விஷ் சொன்ன நடிகை
சம்யுக்தா ஹெக்டே | விஜய்
  • Share this:
தமிழ் சினிமாவில் தளபதியாக வலம் வரும் நடிகர் விஜய் நேற்று தனது 46-வது பிறந்தநாளைக் கொண்டாடினார். முன்னணி தயாரிப்பு நிறுவனங்கள், திரைத்துறை பிரபலங்கள் என பலரும் தங்களது வாழ்த்துகளை சமூகவலைதளங்களில் பதிவிட்டனர்.

கொரோனா அச்சுறுத்தலால் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் வேண்டாம் என்று தனது ரசிகர்களுக்கு விஜய் வலியுறுத்தியிருந்த நிலையில், சமூக வலைதளங்களில் பிரத்யேக ஹேஷ்டேக் மற்றும் ஸ்பெஷல் போஸ்டர்களை வெளியிட்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர் ரசிகர்கள்.

விஜய்யுடன் இரண்டு படங்களில் ஜோடியாக நடித்த நடிகை கீர்த்தி சுரேஷ் விஜய்யின் மாஸ்டர் பட பாடலுக்கு வயலின் வாசித்து தனது வாழ்த்தை தெரிவித்திருந்த நிலையில், நடிகை சம்யுக்தா ஹெக்டே வாத்தி கம்மிங் பாடலுக்கு வித்தியாசமான நடனமாடி பர்த்டே விஷ் சொல்லியுள்ளார்.
மேலும் படிக்க: விஜய் பிறந்த நாளுக்கு வித்தியாசமாக வாழ்த்து சொன்ன கீர்த்தி சுரேஷ்

சம்யுக்தா ஹெக்டேவின் இந்த வித்தியாசமான வாழ்த்து வீடியோ ரசிகர்களின் லைக்ஸைப் பெற்று சமூகவலைதளத்தில் கவனம் பெற்று வருகிறது. வாட்ச் மேன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான சம்யுக்தா, கோமாளி, பப்பி உள்ளிட்ட படத்திலும் நடித்துள்ளார்.
First published: June 23, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading