Home /News /entertainment /

சமுத்திரகனியின் மெகா தெலுங்கு ரீமேக் திட்டம்..

சமுத்திரகனியின் மெகா தெலுங்கு ரீமேக் திட்டம்..

வினோதய சித்தம்

வினோதய சித்தம்

Vinodhaya Sidham Movie Telugu Remake : வினோதய சித்தம் படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய திட்டமிட்டுள்ளார் சமுத்திரகனி.

சமுத்திரகனி, தம்பி ராமையா நடிப்பில் சமீபத்தில் ஓடிடியில் வெளியான படம் விநோதய சித்தம். இந்தப் படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய திட்டமிட்டுள்ளார் சமுத்திரகனி.

விநோதய சித்தம் திரைப்படம், இதே பெயரில் நடத்தப்பட்ட நாடகத்தைத் தழுவி எடுக்கப்பட்டது. இதில் சொல்லப்பட்ட வாழ்வு குறித்த கருத்துகள் பரவலான வரவேற்பை பெற்றது. அறிவுரை சொல்லும் சமுத்திரகனியை ரசிகர்கள் முதல்முறையாக இந்தப் படத்தில்தான் ரசித்தனர். ஜீ 5 ஓடிடி தளத்தில் படம் பார்க்கக் கிடைக்கிறது.

இந்தப் படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய திட்டமிட்டுள்ளார் சமுத்திரகனி. தெலங்கில் சமுத்திரகனி ஏற்கனவே அறிமுகமானவர். வரவிருக்கிற ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் படத்திலும் நடித்துள்ளார். ஆனால், விநோயதய சித்தத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்கும் திட்டம் சமுத்திரகனியிடம் இல்லை. முன்னணி நட்சத்திரங்களை நடிக்க வைத்து படத்தை இயக்க நினைக்கிறார்.

also read : ஐஸ்வர்யா ராய் நடிப்பில் படமாகும் ரவீந்திரநாத் தாகூரின் நாவல்..



தான் நடித்த வேடத்தில் பவன் கல்யாணை நடிக்க வைப்பது அவரது திட்டம். அப்படியானால் தம்பி ராமையா ரோலில் நடிப்பது?
சமுத்திரகனியின் சாய்ஸ் மோகன்லால். மலையாளத்தில் மோகன்லாலுடன் இணைந்து சமுத்திரகனி நடித்துள்ளார். அவரை இந்த ரீமேக்கில் நடிக்க வைத்தால் படத்தை மலையாளத்திலும் எளிதாக கொண்டு சேர்க்கலாம் என நினைக்கிறார். பவன் கல்யாணும், மோகன்லாலும் அதற்கு ஒத்துக் கொள்வார்களா என்பது பத்து மில்லியன் டாலர் கேள்வி (இருவரின் சம்பளம் சேர்த்து படத்தின் பட்ஜெட் பத்து மில்லியன் டாலர் ஆகாது...?)

ஒரு கொசுறு தகவல். விநோதய சித்தம் நாடகம் ஹாலிவுட்டில் வெளியான ஆன்டனி ஹாப்கின்ஸ், பிராட் பிட் நடித்த மீட் ஜோ பிளாக் படத்தின் மேலோட்டமான தழுவல்.
Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: Samuthirakani, Tamil movies

அடுத்த செய்தி