ராஜமௌலியின் படத்தில் இணைந்த சமுத்திரக்கனி!

இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் உருவாகி வரும் 'ஆர்ஆர் ஆர்’ என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க சமுத்திரக்கனி ஒப்பந்தமாகியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ராஜமௌலியின் படத்தில் இணைந்த சமுத்திரக்கனி!
நடிகர், இயக்குநர் -சமுத்திரகனி
  • News18
  • Last Updated: December 23, 2018, 12:31 PM IST
  • Share this:
இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் உருவாகி வரும் 'ஆர்ஆர் ஆர்’ என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க சமுத்திரக்கனி ஒப்பந்தமாகியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

`பாகுபலி’ என்னும் வெற்றிப் படத்தை இயக்கியவர் ராஜமௌலி. இரண்டு பாகங்களாக உருவான இந்தப் படம் சுமார் ரூ.400 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டது. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் வெளியான இந்தப் படங்கள் ரூ.1000 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தன.

பாகுபலி படத்தை அடுத்து இயக்குநர் ராஜமௌலி ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர்-ஐ வைத்து ‘ஆர்ஆர்ஆர்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த நவம்பர் 19-ம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
மேலும் இந்தப் படத்துக்கு ராம ராவண ராஜ்யம் என்று டைட்டில் வைத்திருப்பதாகவும், இந்தப் படத்தில் ராம் சரண் ராமன் கதாபாத்திரத்திலும், ஜூனியர் என்.டி.ஆர் ராவணன் கதாபாத்திரத்திலும் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால் படக்குழு இதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை பிரியாமணி ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த நிலையில் படத்தில் ராம் சரணின் மாமா கதாபாத்திரத்தில் நடிக்க நடிகரும் இயக்குநருமான சமுத்திரக்கனி ஒப்பந்தமாகியிருப்பதாக கூறப்படுகிறது. சில வாரங்களில் அவர் படக்குழுவில் இணைவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அண்ணனை கொன்ற தம்பி, ஆனால் கொலையல்ல - வீடியோ

First published: December 23, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்