Home /News /entertainment /

சமுத்திரகனி, கதிர் நடிக்கும் தலைக்கூத்தல் பட பூஜை!

சமுத்திரகனி, கதிர் நடிக்கும் தலைக்கூத்தல் பட பூஜை!

தலைக்கூத்தல்

தலைக்கூத்தல்

இந்தப் படத்தில் சமுத்திரகனியுடன் கதிர் இணைந்து நடிக்கிறார். திறமையான ஆனால் அதிகம் பிரகாசிக்காமலிருக்கும் நடிகர்.

சமுத்திரகனி முழுநேர நடிகராகிவிட்டார். வித்தியாசமான களத்தில் நடுத்தர வயது மனிதனை வைத்து கதை சொல்வதென்றால் அனைவரும் தேடிச் செல்லும் ஒரே நடிகராக சமுத்திரகனி இருக்கிறார்.

அவரது விநோதய சித்தம் படத்தைத் தொடர்ந்து டிசம்பர் 24-ம் தேதி ரைட்டர் படம் திரைக்கு வருகிறது. படம் வெளியாகும் முன்பே சிறந்த படம் என்ற பாராட்டை ப்ரீமியர் காட்சிகளின் மூலம் பெற்றுள்ளது.

சமுத்திரகனி நாயகனாக நடிக்க இன்று பூஜையுடன் தொடங்கப்பட்ட படம் தலைக்கூத்தல். இந்தப் படத்தில் சமுத்திரகனியுடன் கதிர் இணைந்து நடிக்கிறார். திறமையான ஆனால் அதிகம் பிரகாசிக்காமலிருக்கும் நடிகர். ஒய் நாட் ஸ்டுடியோ சசிகாந்த் இந்தப் படத்தை தயாரிக்கிறார். இவர் தயாரித்த விக்ரம் வேதாவில் கதிர் முக்கியமான வேடத்தில் நடித்திருந்தார். இப்போது இந்தப் படத்திலும் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

Samuthirakani and Kathir Thalaikoothal Pooja held today, thalaikoothal, thalaikoothal in kerala, thalaikoothal tamil movie, thalaikoothal video, thalaikoothal in english, thalaikoothal science, thalaikoothal practice, Thalaikoothal movie, Thalaikoothal samuthirakani, Thalaikoothal kathir, தலைக்கூத்தல், தலைக்கூத்தல் திரைப்படம், தலைக்கூத்தல் சமுத்திரக்கனி, தலைக்கூத்தல் கதிர்

தலைக்கூத்தல் என்ற வித்தியாசமான தலைப்பில் படத்தை எழுதி, இயக்குகிறவர் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன். இவர் லென்ஸ், தி மஸ்கிட்டோ பிலாஸபி படங்களை இயக்கியவர். இரண்டு படங்களும் விமர்சன ரீதியாக பாராட்டுப் பெற்ற படங்கள். இந்தமுறை தான் ஒய் நாட் ஸ்டுடியோ போன்ற பெரிய நிறுவனத்துக்காக படம் இயக்குகிறார். இதனால், முந்தைய இரு படங்கள் போலன்றி தலைக்கூத்தல் அனைத்து சென்டர்களையும் சென்று சேரும் என நம்பலாம்.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published:

Tags: Samuthirakani

அடுத்த செய்தி