முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / நரை முடியை மறைக்க சொன்ன அப்பா - சமீரா ரெட்டி கூறிய அட்டகாச பதில்!

நரை முடியை மறைக்க சொன்ன அப்பா - சமீரா ரெட்டி கூறிய அட்டகாச பதில்!

சமீரா ரெட்டி

சமீரா ரெட்டி

தன்னம்பிக்கை இருக்கும் போது போலியான முகமூடி எதற்கு?

  • Last Updated :

தனது நரை முடி குறித்து நடிகை சமீரா ரெட்டி சமூக வலைதளங்களில் போட்டிருக்கும் பதிவு தற்போது பயங்கர வைரலாகி வருகிறது.

பாலிவுட் திரையுலகில் கடந்த 2002-ஆம் ஆண்டு வெளியான “மெய்னி தில் துஜ்கோ தியா” என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சமீரா ரெட்டி. தமிழில் இயக்குநர் கௌதம் மேனன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான “வாரணம் ஆயிரம் ” படத்தின் மூலம் அறிமுகமானார்.

தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வந்த சமீரா ரெட்டி, பின்னர் கடந்த 2014-ம் ஆண்டு அக்‌ஷய் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து நடிப்பதற்கு குட் பை சொன்ன சமீராவுக்கு ஒரு மகனும், மகளும் இருக்கிறார்கள்.




 




View this post on Instagram





 

A post shared by Sameera Reddy (@reddysameera)



இந்நிலையில் தற்போது சமீரா ரெட்டியின் சமூக வலைதள பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. அப்படி என்ன இருக்கிறது அந்த பதிவில் என்கிறீர்களா? விஷயம் இருக்கிறது. “நான் ஏன் எனது வெள்ளை முடியை மறைக்கவில்லை என்று என் அப்பா கேட்டார். மக்கள் என்னைப் பற்றி நினைப்பது பற்றி அவர் கவலைப்பட்டார். அவர்கள் அப்படி நினைத்தால் என்ன? எனக்கு வயதாகி விட்டது, நான் அழகாயில்லை என்று அர்த்தமா? நான் சீராகயில்லை, பார்ப்பதற்கு நேர்த்தியாக இல்லை என்று பொருள்படுமா?

நான் முன்பு போல் இதைப் பற்றி சிந்திப்பதில்லை என்றும் சுதந்திரம் என்னை அந்த எண்ணத்திலிருந்து விடுவிக்கிறது என்றும், நான் அவரிடம் சொன்னேன். நான் ஒவ்வொரு 2 வாரங்களுக்கும் முடிக்கு வண்ணம் தீட்டுவேன். அதனால் அந்த வெள்ளை நிறத்தை யாராலும் கண்டு பிடிக்க முடியாது. இன்று எனக்கான இனிமையான பொழுதை எடுத்துக் கொண்டு, எனக்கு எப்போது தோன்றுகிறதோ அப்போது வண்ணம் பூச முடிவு செய்தேன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நான் தனியாக இல்லை என்பது எனக்குத் தெரியும். பழைய சிந்தனை செயல்முறைகள் உடைக்கப்படும்போது தான் மாற்றமும் ஏற்பும் தொடங்குகிறது. எப்போதும் ஒருவருக்கொருவர் துணையாக இருக்க வேண்டும். தன்னம்பிக்கை இருக்கும் போது போலியான முகமூடி எதற்கு? என் அப்பா புரிந்து கொண்டார். ஒரு தந்தையாக அவரது கவலையை நான் புரிந்து கொண்டேன். ஒவ்வொரு நாளும் நாம் முன்னேற கற்றுக்கொள்வோம், சிறிய மாற்றங்களில் அமைதியைக் காண்கிறோம். மேலும் அந்த சிறிய படிகள்தான் நம்மை மிகப் பெரிய இடங்களுக்கு அழைத்துச் செல்கின்றன.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Sameera Reddy