Home /News /entertainment /

5 மொழிகளில் தயாராகும் சமந்தாவின் யசோதா!

5 மொழிகளில் தயாராகும் சமந்தாவின் யசோதா!

யசோதா

யசோதா

சமந்தா அடுத்து யசோதா என்ற படத்தில் நடிக்கிறார். இது தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் பான் - இந்தியா திரைப்படமாக தயாராகிறது.

சமந்தா நடிப்பில் 5 மொழிகளில் தயாராகும் யசோதா திரைப்படம் நேற்று பூஜையுடன் தொடங்கியது.

சமந்தா தனது திருமண முறிவுக்குப் பிறகு தொடர்ந்து படங்களை ஒப்புக் கொண்டு வருகிறார். தமிழில் ட்ரீம் வாரியர் தயாரிப்பிலும் ஒரு படம் நடிக்கிறார். ஆனால், எந்தப் படம் முதலில் தொடங்கும் என்பது கேள்விக்குறியாக இருந்தது. அதற்கு பதில் கிடைத்திருக்கிறது.

சமந்தா நடிப்பில் இரு படங்கள் வெளியாக உள்ளன. ஒன்று தமிழ்ப் படமான காத்து வாக்குல ரெண்டு காதல். இன்னொன்று தெலுங்கில் தயாராகியிருக்கும் சாகுந்தலம். இதில் சாகுந்தலாம் நாயகி மையத் திரைப்படம். காத்து வாக்குல ரெண்டு காதலில் விஜய் சேதுபதி, நயன்தாரா சமந்தாவுடன் நடித்துள்ளனர். விரைவில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

சமந்தா அடுத்து யசோதா என்ற படத்தில் நடிக்கிறார். ஹரி மற்றும் ஹரீஷ் இணைந்து இயக்கும் இந்தப் படத்தை ஸ்ரீதேவி பிலிம்ஸ் சிவலங்கா கிருஷ்ண பிரசாத் தயாரிக்கிறார். இசை மணிசர்மா. ஒளிப்பதிவு எம்.சுகுமார். நாயகி மையத் திரைப்படமான இது தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் பான் - இந்தியா திரைப்படமாக தயாராகிறது.

இது தவிர சமந்தா ஒப்புக் கொண்டிருக்கும் இரு படங்கள் தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் தயாராகின்றன. படவரீசையை வைத்துப் பார்த்தால் அடுத்த வருடம் சமந்தாவின் வருடமாக இருக்கும்.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published:

Tags: Actress Samantha

அடுத்த செய்தி