ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

Samantha: சமந்தாவின் யசோதா வெளியீட்டு தேதி அறிவிப்பு!

Samantha: சமந்தாவின் யசோதா வெளியீட்டு தேதி அறிவிப்பு!

சமந்தா

சமந்தா

யசோதா தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    சமந்தாவின் யசோதா திரைப்படம் நவம்பர் 11-ம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

    தனது நடிப்பு திறமையால் இந்திய ரசிகர்களை கவர்ந்த சமந்தா, ஹாலிவுட்டிலும் கால் பதிக்க உள்ளார். அவர் சந்தேகத்திற்கு இடமின்றி கமர்ஷியல் வெற்றிப் படங்களில் நடித்த முன்னணி நடிகைகளில் ஒருவர். அவரது வரவிருக்கும் பான்-இந்திய படங்களில் யசோதாவும் ஒன்று.

    சமந்தா தனது சமூக வலைதளங்களில் புதிய போஸ்டருடன் வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளார். யசோதா தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. இதில் சமந்தாவுடன் இணைந்து, வரலக்ஷ்மி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி சர்மா, சம்பத் ராஜ், சத்ரு, மதுரிமா, கல்பிகா கணேஷ், திவ்யா ஸ்ரீபாதா, பிரியங்கா சர்மா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

    இணையத்தில் லீக்கான வாரிசு படத்தில் விஜய் பாடிய பாடல்

    படத்தின் தொழில்நுட்பக் குழுவில், இசையமைப்பாளராக மணி சர்மா, ஒளிப்பதிவாளராக சுகுமார் மற்றும் எடிட்டராக மார்த்தாண்ட வெங்கடேஷ் ஆகியோர் உள்ளனர். ஸ்ரீதேவி மூவிஸ் பேனரில் சிவலெங்கா கிருஷ்ண பிரசாத் இப்படத்தை தயாரித்துள்ளார்.

    Published by:Shalini C
    First published:

    Tags: Actress Samantha