ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

வாடகைத்தாய் முறையில் நடக்கும் மோசடி.. வெளியானது சமந்தாவின் யசோதா ட்ரைலர்

வாடகைத்தாய் முறையில் நடக்கும் மோசடி.. வெளியானது சமந்தாவின் யசோதா ட்ரைலர்

யசோதா

யசோதா

யசோதா தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  சமந்தா நடித்துள்ள யசோதா படத்தின் தமிழ் ட்ரைலரை நடிகர் சூர்யா வெளியிட்டார்.

  சமந்தாவின் யசோதா திரைப்படம் நவம்பர் 11-ம் தேதி வெளியாவதாகஅறிவிக்கப்பட்டுள்ளது. வாடகைத்தாய்  மையமாக வைத்து எடுக்கபட்டுள்ளது யசோதா திரைப்படம்.வாடகைத்தாய் என்பது குழந்தை பெற இயலாதவர்களுக்கு வரப்பிராசாதமாக கருதப்படுகிறது.

  தனது நடிப்பு திறமையால் இந்திய ரசிகர்களை கவர்ந்த சமந்தா, ஹாலிவுட்டிலும் கால் பதிக்க உள்ளார். அவர் சந்தேகத்திற்கு இடமின்றி கமர்ஷியல் வெற்றிப் படங்களில் நடித்த முன்னணி நடிகைகளில் ஒருவர். அவரது வரவிருக்கும் பான்-இந்திய படங்களில் யசோதாவும் ஒன்று.

  யசோதா தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. இதில் சமந்தாவுடன் இணைந்து, வரலக்ஷ்மி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி சர்மா, சம்பத் ராஜ், சத்ரு, மதுரிமா, கல்பிகா கணேஷ், திவ்யா ஸ்ரீபாதா, பிரியங்கா சர்மா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

  ' isDesktop="true" id="826101" youtubeid="jvYZVcuJzR4" category="cinema">

  Read More: ''அதிகாரப்பூர்வ செய்திக்காக காத்திருந்தேன்'' வாரிசு செல்ஃபி குறித்து ட்வீட் செய்த குஷ்பு!

  படத்தின் தொழில்நுட்பக் குழுவில், இசையமைப்பாளராக மணி சர்மா, ஒளிப்பதிவாளராக சுகுமார் மற்றும் எடிட்டராக மார்த்தாண்ட வெங்கடேஷ் ஆகியோர் உள்ளனர். ஸ்ரீதேவி மூவிஸ் பேனரில் சிவலெங்கா கிருஷ்ண பிரசாத் இப்படத்தை தயாரித்துள்ளார்.இப்படம்  நவம்பர் 11-ம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  Published by:Srilekha A
  First published:

  Tags: Actor Suriya, Actress Samantha