நடிகர் நாக சைதன்யா மற்றும் நடிகை சமந்தா இருவரும் அக்டோபர் 2021-ல் தங்கள் திருமண உறவில் இருந்து பிரிவதாக அறிவித்தனர். இதையடுத்து அவர்கள் பிரிந்ததற்கான காரணமாக பல்வேறு தகவல்கள் இணையத்தில் வெளியாகின. ஆனால் சம்மந்தப்பட்ட இருவரும் விவாகரத்துக்கான காரணத்தை வெளிப்படையாக சொல்ல மறுத்த நிலையில், சைத்தன்யாவின் தந்தை நடிகர் நாகார்ஜுனா, சமந்தா நாகசைத்தன்யா இருவருக்கும் பிரிவுக்குக் காரணமாக எது இருந்திருக்கும் என்பது குறித்து மனம் திறந்துள்ளார்.
ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த நாகர்ஜுனா,
விவாகரத்துக்கு முதலில் விண்ணப்பித்தது சமந்தா தான் என்பதை போட்டுடைத்தார். அந்த முடிவை நாக சைதன்யா ஏற்றுக்கொண்டதாகவும், ஆனால் அப்பாவாகிய தன்னைப் பற்றியும், நான் என்ன நினைப்பேன், குடும்பத்தின் நற்பெயர் என்னவாகும் என்பது குறித்தும் அவர் மிகவும் கவலைப்பட்டதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய நாகார்ஜுனா, “நான் கவலைப்படுவேன் என்று நினைத்த நாக சைதன்யா எனக்கு மிகவும் ஆறுதல் கூறினார். அவர்கள் இருவரும் திருமண வாழ்க்கையில் 4 வருடங்கள் ஒன்றாக இருந்தார்கள். அவர்களிடையே எந்த பிரச்னையும் வரவில்லை. இருவரும் மிகவும் நெருக்கமாக இருந்ததால் இந்த முடிவு எப்படி வந்தது என்று தெரியவில்லை. சமந்தாவும் சைத்தன்யாவும் ஒன்றாக 2021 புத்தாண்டைக் கொண்டாடினர். அதன் பிறகு பிரச்னைகள் எழுந்ததாகத் தெரிகிறது” என்றார்.
போல்டான வேடங்களில் நடிக்கும் சமந்தாவின் முடிவில் நாக சைதன்யா அதிருப்தியில் இருந்ததாக வதந்திகள் வந்தன. சில உறுதிப்படுத்தப்படாத அறிக்கைகள், நாக சைதன்யா மட்டுமல்ல, அவரது தந்தை நாகார்ஜுனா அக்கினேனியும் திருமணத்திற்குப் பிறகு படங்களில் போல்டான காட்சிகள் மற்றும் ஐட்டம் பாடல்களுக்கு நடனமாடும் சமந்தாவின் முடிவில் மிகவும் அதிருப்தியில் இருந்ததாக கூறுகின்றன.
ஹேஷ்டேக் ட்ரெண்ட் செய்து விஜய்யை கொண்டாடும் தெலுங்கு ரசிகர்கள்!
நாக சைத்தன்யாவிடமிருந்து
பிரிந்த சமந்தாவுக்கு வேறு தொடர்புகள் இருப்பதாக வதந்திகள் பரவியது. அவர் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பவில்லை என்றும், கருக்கலைப்பு செய்ததாகவும் கூறுகின்றன. சமந்தாவும் நாக சைதன்யாவும் அக்டோபர் 2, 2021 அன்று தாங்கள் பரஸ்பரம் பிரிவதாக அறிவிப்பை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.