ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

''வாழ்க்கையில் போராடுறவங்களுக்கு நான் சொல்றது....'' - உருக்கமாக பதிவிட்ட சமந்தா.. ஆறுதல் சொல்லும் ரசிகர்கள்

''வாழ்க்கையில் போராடுறவங்களுக்கு நான் சொல்றது....'' - உருக்கமாக பதிவிட்ட சமந்தா.. ஆறுதல் சொல்லும் ரசிகர்கள்

சமந்தா

சமந்தா

போராடிக்கொண்டே இருங்கள். நீங்கள் இன்னும் பலமாக தயாராவீர்கள். இன்னும் திடமாக மாறி கஷ்டங்களை எதிர்கொள்வீர்கள்

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India

மையோசிடிஸ் எனும் அறிய வகை தசை அழற்சி நோயினால் பாதிக்கப்பட்டிருக்கிறார் சமந்தா. உடல் நலனைக் கருத்தில் கொண்டு யசோதா படத்துக்காக, தமிழ், தெலுங்கில் தலா 1 பேட்டி கொடுத்து அப்பட ப்ரமோஷனை முடித்துக்கொண்டார். அந்த பேட்டியில், ''நல்ல நாட்களும் மோசமான நாட்களும் என் வாழ்க்கையில் மாறி மாறிவருகின்றன. சில நாட்கள் படுக்கையிலிருந்து எழுவது கூட சிரமமாக இருக்கும். சில நாட்கள் எனக்கு இருக்கும் பிரச்னைகளை எதிர்த்து நான் போராட விரும்புவேன்'' என்று குறிப்பிட்டிருந்தார்.

இதன் ஒரு பகுதியாக சிகிச்சைக்காக சமீபத்தில் அமெரிக்கா சென்ற சமந்தா, அடுத்ததாக தென் கொரியா செல்ல திட்டமிட்டிருக்கிறாராம். விவாகரத்து சர்ச்சையிலிருந்து மீண்டுவந்து திரைப்படங்களில் பரபரப்பாக நடித்துவந்த சமந்தாவை மையோசிடிஸ் நோய் முடக்கிப்போட்டுள்ளதாக தெரிகிறது. இதன் காரணமாக ஒப்பந்தமான பாலிவுட் படங்களிலிருந்து விலக முடிவெடுத்திருப்பதாக அண்மையில் தகவல் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது விஜய் தேவரகொண்டோவுடன் சமந்தா இணைந்து நடிக்கும் குஷி படம் தயாரிப்பில் இருக்கிறது.

இந்த நிலையில் சமந்தாவுடன் மாஸ்கோவின் காவிரி படத்தில் ஜோடியாக நடித்தவரும் பாடகி சின்மயியின் கணவருமான ராகுல் ரவீந்திரன் நம்பிக்கை அளிக்கும் விதமாக பதிவிட்டிருந்தார். அவரது பதிவில்,

''எத்தனை கஷ்டங்கள் வந்தாலும் நீ போராடிக்கொண்டே இருப்பாய். இன்னும் இன்னும் போராடிக்கொண்ட இருப்பாய். ஏனென்றால் நீ ஒரு இரும்புப்பெண் உன்னை எதுவும் தோற்கடிக்காது. கஷ்டப்படுத்தாது. மாறாக அவை உன்னை இன்னும் சக்தி வாய்ந்தவளாக மாற்றும்'' என்று குறிப்பிட்டிருந்தார்.

அவருக்கு பதிலளித்த சமந்தா, ''நன்றி ராகுல், யாராவது தங்கள் வாழ்க்கையில் போரோடுகிறார்களோ அவர்களுக்கு இதனை சொல்லிக்கொள்கிறேன். போராடிக்கொண்டே இருங்கள். நீங்கள் இன்னும் பலமாக தயாராவீர்கள். இன்னும் திடமாக மாறி கஷ்டங்களை எதிர்கொள்வீர்கள்'' என்று குறிப்பிட்டுள்ளார். அவரது பதிவில் நீங்கள் இப்பிரச்னையில் இருந்து மீண்டு பழைய சமந்தாவாக வருவீர்கள் என ரசிகர்கள் நம்பிக்கையளித்துவருகின்றனர்.

First published:

Tags: Health, Samantha