ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

நான் ஒன்றும் சீக்கிரமே இறந்துவிட போவதில்லை...நேர்க்காணலில் கண்ணீர் விட்டு அழுத சமந்தா

நான் ஒன்றும் சீக்கிரமே இறந்துவிட போவதில்லை...நேர்க்காணலில் கண்ணீர் விட்டு அழுத சமந்தா

சமந்தா

சமந்தா

இப்போது என்னுடைய நிலை உயிருக்கு ஆபத்தானது அல்ல. நான் இன்னும் இறக்கவில்லை என்று தெரிவித்திருக்கிறார் சமந்தா.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  நேர்க்காணல் ஒன்றில் தனது உடல்நிலை குறித்துப் பேசிய சமந்தா, உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விட்ட வீடியோ ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

  தனது தெலுங்கு படமான யசோதாவின் வெளியீட்டிற்கு தயாராகி வரும் நடிகை சமந்தா ரூத் பிரபு, ஒரு பேட்டியில் தனது உடல்நிலை குறித்து மனம் திறந்து கூறியுள்ளார். அப்போது தனது உடல்நிலையை எதிர்த்துப் போராடிய பயணத்தை நினைவுகூர்ந்த அவர், தான் உயிருக்கு ஆபத்தான நிலையில் இல்லை என்றும், தனது உடல்நிலை குறித்த மிகைப்படுத்தப்பட்ட செய்திகளை ஊடகங்கள் தவிர்த்திருக்க விரும்புவதாகவும் தெளிவுபடுத்தினார்.

  தொடர்ந்து பேசிய சமந்தா, “நான் எனது பதிவில் (இன்ஸ்டாகிராம்) கூறியது போல், சில நாட்கள் நல்லதாக இருக்கும், சில நாட்கள் கெட்டதாக இருக்கும். சில நாட்களில், ஒரு அடி எடுத்து வைப்பது கூட கடினமாக இருப்பதாக உணர்ந்தேன். ஆனால் நான் இப்போது திரும்பிப் பார்க்கும்போது, இவ்வளவு தூரம் கடந்து வந்திருக்கிறேன் என ஆச்சரியப்படுகிறேன். நான் இங்கே போராட வந்திருக்கிறேன்.

  ஒரு பெண்ணை எப்படி ஸ்பெஷலாக உணர வைப்பது என உங்களுக்குத் தெரியும் - கமல் ஹாசனுக்கு பிந்து மாதவி வாழ்த்து

  ' isDesktop="true" id="832769" youtubeid="af-Q5RFs90U" category="cinema">

  நான் ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகிறேன். எனது நிலைமை உயிருக்கு ஆபத்தானது என்று விளக்கும் பல கட்டுரைகளை நான் பார்த்தேன். இப்போது என்னுடைய நிலை உயிருக்கு ஆபத்தானது அல்ல. நான் இன்னும் இறக்கவில்லை. அந்த தலைப்புச் செய்திகள் மிகவும் அவசியமானவை என்று தோன்றவில்லை” எனக் குறிப்பிட்டு உணர்ச்சிவசப்பட்டார்.

  யசோதா படத்தில் சமந்தாவுடன் இணைந்து, வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி சர்மா, சம்பத் ராஜ், சத்ரு, மதுரிமா, கல்பிகா கணேஷ், திவ்யா ஸ்ரீபாதா, பிரியங்கா சர்மா மற்றும் பலர் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

  Published by:Shalini C
  First published:

  Tags: Samantha