Home /News /entertainment /

Thalapathy 67: லோகேஷ் கனகராஜின் தளபதி 67-ல் விஜய்க்கு வில்லியாகும் சமந்தா?

Thalapathy 67: லோகேஷ் கனகராஜின் தளபதி 67-ல் விஜய்க்கு வில்லியாகும் சமந்தா?

விஜய் - சமந்தா

விஜய் - சமந்தா

கேங்ஸ்டர் படம் என்று கூறப்படும் தளபதி 67 படத்தின் இறுதிக்கட்ட ஸ்கிரிப்ட் பணியில் ஈடுபட்டுள்ளார் லோகேஷ் கனகராஜ்.

    விஜய்யின் தளபதி 67 படத்தில் நடிகை சமந்தா நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிப்பதாகக் கூறப்படுகிறது.

    'தளபதி 67' படத்தின் மூலம் நான்காவது முறையாக விஜய்யுடன் சமந்தா மீண்டும் இணைகிறார். அந்தப் படத்தில் சமந்தா வில்லி கேரக்டரில் நடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 'கத்தி', 'தெறி' மற்றும் 'மெர்சல்' ஆகிய மூன்று படங்களில் விஜய்க்கு ஜோடியாக நடித்தார் சமந்தா. இந்தப் படங்களில் அவர்களின் திரை கெமிஸ்ட்ரி ரசிகர்களால் பெரிதும் ரசிகப்பட்டது. இதையடுத்து சமந்தா தற்போது, லோகேஷ் கனகராஜ் இயக்கும் 'தளபதி 67' படத்தின் மூலம் மீண்டும் விஜய்யுடன் இணைகிறார்.

    சமீபத்திய தகவல்களின்படி, சமந்தா எதிர்மறை சாயலில் ஒரு போலீஸ்காரராக நடிக்கிறார். முன்பு நடித்தப் படங்களைப் போல விஜய்யை காதலிக்கும் பெண்ணாக அவர் இந்தப் படத்தில் நடிக்கவில்லையாம்.

    ரஜினிகாந்தின் தலையீட்டால் லிங்கா தோல்வியடைந்தது - கே.எஸ்.ரவிக்குமார் ஓபன் டாக்

    இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை, ஆகஸ்ட் இறுதியில் அது வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கேங்ஸ்டர் படம் என்று கூறப்படும் தளபதி 67 படத்தின் இறுதிக்கட்ட ஸ்கிரிப்ட் பணியில் ஈடுபட்டுள்ளார் லோகேஷ் கனகராஜ். இந்தப் படத்தின் படப்பிடிப்பு அக்டோபரில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    சமந்தா தற்போது தெலுங்கு படங்களான 'சாகுந்தலம்' மற்றும் 'குஷி', தமிழ்-தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் 'யசோதா' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இவை அனைத்தும் தயாரிப்பின் வெவ்வேறு கட்டங்களில் உள்ளன.
    Published by:Shalini C
    First published:

    Tags: Samantha, Thalapathy vijay

    அடுத்த செய்தி