நடிகை சமந்தாவும் அவரது முன்னாள் கணவர் நாக சைத்தன்யாவும் வேறுபாடுகளை களைந்து மீண்டும் இணைய வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
தென்னிந்திய முன்னணி நடிகை சமந்தா சமீபத்தில், தான் அறிய வகை நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக சமூக வலைதளங்களில் அறிவித்திருந்தார். அவரது இன்ஸ்டகிராம் போஸ்ட்டில், சமந்தாவின் முன்னாள் கணவரின் சகோதரர் அகில் உட்பட பல பிரபலங்களும் விரைவில் குணமடைய வாழ்த்தியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து சமந்தா விரைவில் குணமடைய வாழ்த்துவதற்காக மருத்துவமனைக்கு நாக சைத்தன்யா நேரில் சென்றதாக ஊகங்கள் பரவின. இதைத் தொடர்ந்து, இருவரும் தங்கள் விவாகரத்து குறித்து பரிசீலித்து, மீண்டும் இணைவது குறித்து சிந்தித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரஞ்சிதமே ரஞ்சிதமே... வெளியானது விஜய் குரலில் வாரிசு ஃபர்ஸ்ட் சிங்கிள் ப்ரோமோ!
இருப்பினும், இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. நாகார்ஜுனாவும் தனது முன்னாள் மருமகளை விரைவில் சந்திக்க திட்டமிட்டுள்ளதாக செய்திகள் பரவி வருகின்றன. வேலையைப் பொறுத்தவரை, யசோதா மற்றும் சாகுந்தலம் ஆகிய இரு படங்களின் டப்பிங் பணிகளை மேற்கொண்டிருக்கிறார் சமந்தா. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளுக்கும் அவர் குரல் கொடுத்து வருகிறார். அதோடு, சமீபத்தில் நடித்து முடித்த இரண்டு விளம்பரங்களுக்கும் அவர் டப்பிங் பேசுவதாக கூறப்படுகிறது. மறுபுறம் நாக சைதன்யா தற்போது, வெங்கட் பிரபுவின் படப்பிடிப்பில் இருக்கிறார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actress Samantha