Home /News /entertainment /

பாலிவுட்டில் எண்ட்ரியாகும் சமந்தா? ஹீரோ யார் தெரியுமா?

பாலிவுட்டில் எண்ட்ரியாகும் சமந்தா? ஹீரோ யார் தெரியுமா?

சமந்தா

சமந்தா

சமந்தாவை படத்தில் இணைப்பதற்கான வேலைகள் முடிந்துவிட்ட நிலையில், அவரது படப்பிடிப்பு தேதிகள் குறித்து இப்போது விவாதிக்கப்படுகிறதாம்.

    நடிகை சமந்தா பாலிவுட்டில் அறிமுகமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    தி ஃபேமிலி மேன் படத்தில் நடித்ததிலிருந்து, சமந்தா ரூத் பிரபு அனைவருக்கும் பிடித்தமானவராகிவிட்டார். அவர் புஷ்பா படத்தில் இடம்பெற்ற ஊ அண்டாவா பாடலில் தனது அட்டகாசமான நடனத்தால் அனைவரையும் திகைக்க வைத்தார். இப்போது, அவர் ஆயுஷ்மன் குரானாவுக்கு ஜோடியாக பாலிவுட்டில் அறிமுகமாக உள்ளதாக சமீபத்திய தகவல்கள் கூறுகின்றன.

    சமந்தா நடிகர் ஆயுஷ்மன் குரானாவுக்கு ஜோடியாக பாலிவுட்டில் அறிமுகமாகும் படத்தில் கையொப்பம் போட்டுவிட்டதாகவும், நகைச்சுவை மற்றும் சஸ்பென்ஸ் களத்தில் 'தனித்துவம் வாய்ந்ததாகவும், புதிரானதாகவும்' இப்படம் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. சமந்தாவை படத்தில் இணைப்பதற்கான வேலைகள் முடிந்துவிட்ட நிலையில், அவரது படப்பிடிப்பு தேதிகள் குறித்து இப்போது விவாதிக்கப்படுகிறதாம். ஆனால், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    மிஸ் இந்தியா போட்டியில் விஜய்யின் வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடிய டைட்டில் வின்னர் சினி ஷெட்டி!

    இதற்கிடையே சமந்தா தனது இரண்டாவது இந்தி படத்திற்கும் தயாராகிவிட்டதாக தகவல்கள் கூறுகின்றன. கரண் ஜோஹரின் அடுத்த படத்திற்காக அவர் அக்‌ஷய் குமாருடன் இணைந்து பணியாற்றுவார் என்று கூறப்படுகிறது. இருவரும் விரைவில் கரண் ஜோஹரின் காபி வித் கரண் நிகழ்ச்சியில் விருந்தினர்களாக கலந்துக் கொள்கிறார்கள்.
    Published by:Shalini C
    First published:

    Tags: Actress Samantha

    அடுத்த செய்தி