• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • முன்னணி நடிகை மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகும் சமந்தா?

முன்னணி நடிகை மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகும் சமந்தா?

சமந்தா

சமந்தா

டாப்ஸி தயாரிக்கவுள்ள இந்தி படத்தில் நடிகை சமந்தா ஹீரோயினாக நடிக்கவிருப்பதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

  • Share this:
    நடிகை டாப்ஸி தயாரிக்கும் படத்தின் மூலம் சமந்தா பாலிவுட்டில் அறிமுகமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

    இயக்குநர் வெற்றிமாறன் இயக்கிய ஆடுகளம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை டாப்ஸி பன்னு. இந்தப் படத்தில் அவர் ஆங்கிலோ இந்தியன் பெண்ணாக தனுஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார். பின்னர் வந்தான் வென்றான் மற்றும் சில தெலுங்கு படங்களில் நடித்த டாப்ஸி அதன் பின்னர் பாலிவுட்டுக்குச் சென்றார்.

    தற்போது பல இந்திப் படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் டாப்ஸி அங்கு முன்னணி நடிகையாக மாறியிருக்கிறார். அங்கு பிஸியாக இருக்கும் அவர், சமீபத்தில் படத் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கினார். சினிமாவில் சாதிக்க துடிப்பவர்களுக்கு தனது நிறுவனம் வாய்ப்பு வழங்கும் எனவும் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், டாப்ஸி அடுத்ததாக தயாரிக்கவுள்ள படத்தில் நடிகை சமந்தா ஹீரோயினாக நடிக்கவிருப்பதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இந்தப் படத்தின் மூலம் சமந்தா பாலிவுட்டில் அறிமுகமாவார் எனவும் கூறப்படுகிறது. விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கிடையே ஷாருக்கானை வைத்து அட்லி இயக்கி வரும் இந்திப் படத்திலிருந்து நயன்தாரா விலகுவதாகவும், அவருக்கு பதில் சமந்தா நடிப்பார் எனவும் தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: