• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • அல்லு அர்ஜுன் படத்தில் ஒரு பாடலுக்கு ஆடும் சமந்தா...?

அல்லு அர்ஜுன் படத்தில் ஒரு பாடலுக்கு ஆடும் சமந்தா...?

சமந்தா

சமந்தா

பூஜா ஹெக்டே உள்பட பல நடிகைகளின் பெயர்கள் அலசப்பட்ட நிலையில், இறுதியாக சமந்தா பாடல் காட்சியில் ஆட ஒப்புக் கொண்டிருப்பதாக தகவல்.

  • Share this:
    அல்லு அர்ஜுன் நடிப்பில் தயாராகி வரும் படம் புஷ்பா படத்தில் ஒரு பாடலுக்கு சமந்தா நடனமாட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    புஷ்பா படம் செம்மர கடத்தல் பின்னணியில் தயாராவதாக கூறப்படுகிறது. பகத் பாசில் இதில் வில்லனாக நடிக்கிறார். இது அவரது முதல் தெலுங்குப் படம். பகத் மொட்டைத் தலையுடன் இருக்கும் அவரது புஷ்பா லுக் சமீபத்தில் வெளியிடப்பட்டது.

    புஷ்பா படத்தின் நாயகி ராஷ்மிகா மந்தனா. ஜெயகபதி பாபு, பிரகாஷ்ராஜ், சுனில், ஹரிஷ் உத்தமன், கிஷோர் உள்பட ஏராளமானோர் படத்தில் நடிக்கின்றனர். பெரிய படம் அதனால் இரண்டு பாகங்களாக வெளியிடுகின்றனர். முதல் பாகம் புஷ்பா - தி ரைஸ் டிசம்பர் 17-ம் தேதி திரைக்கு வருகிறது, சுகுமார் இயக்கம்.

    படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில் ஒரு பாடல் காட்சி எஞ்சியுள்ளது. அல்லு அர்ஜுன் ஆடும் மாஸ் பாடல் காட்சி. உடன் ஆட முன்னணி நடிகைகளை ஆலோசித்து வந்தனர். பூஜா ஹெக்டே உள்பட பல நடிகைகளின் பெயர்கள் அலசப்பட்ட நிலையில், இறுதியாக சமந்தா பாடல் காட்சியில் ஆட ஒப்புக் கொண்டிருப்பதாக தகவல்.

    திருமண முறிவுக்குப் பின் தீவிரமாக நடிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார் சமந்தா. தமிழ், தெலுங்கில் தயாராகும் இரு படங்களில் நடிக்கயிருக்கிறார். இரண்டும் நாயகி மையப் படங்கள். இந்தி வெப் தொடரும் கைவசம் உள்ளது. அத்துடன் ஒரு பாடலுக்கு ஆடவும் தயாராகியிருக்கிறார்.

    2018-ல் சுகுமார் இயக்கத்தில் வெளியான ராம் சரணின் ரங்கஸ்தலம் படத்தில் சமந்தா தான் நாயகி. அதில் சமந்தாவின் கிராமத்துக்கு லுக்கை பேசு பொருளாக்கியவர் சுகுமார். அவரது புஷ்பாவில் ஒரு பாடலுக்கு ஆட கேட்க, சமந்தாவும் சம்மதித்திருப்பதாக ஹைதராபாத்திலிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. இன்னும் ஓரிரு தினங்களில் அதிகாரப்பூர்வ செய்தி வரலாம்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: