Home /News /entertainment /

பிரிவுக்குப் பிறகு முதன் முறையாக நாக சைத்தன்யாவுடன் இருக்கும் படத்தை வெளியிட்ட சமந்தா...

பிரிவுக்குப் பிறகு முதன் முறையாக நாக சைத்தன்யாவுடன் இருக்கும் படத்தை வெளியிட்ட சமந்தா...

சமந்தா - நாக சைத்தன்யா

சமந்தா - நாக சைத்தன்யா

பிரிவுக்குப் பிறகு நாக சைத்தன்யாவுடனான படத்தை இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார் சமந்தா.

    நடிகை சமந்தா தனது கணவர் நாக சைத்தன்யாவை பிரிந்து சில மாதங்கள் ஆன நிலையில், அவருடன் இருக்கும் படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார்.

    படங்களில் ஒன்றாக நடித்து காதலில் விழுந்த சமந்தாவும், நாக சைத்தன்யாவும் கடந்த 2017, அக்டோபர் 7-ம் தேதி திருமணம் செய்துக் கொண்டனர். கோவாவில் இவர்களின் திருமணம் மிகவும் கோலாகலமாக நடந்தது.

    இந்து - கிறிஸ்டியன் என இரு முறைப்படியும் நாகசைத்தன்யா - சமந்தாவின் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகும் ஹீரோயினாக நடித்து வந்தார் சமந்தா. சமீபத்தில் இவரது நடிப்பில் ‘தி ஃபேமிலி மேன் 2’ என்ற வெப் தொடர் வெளியாகி, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

    பிரபல நடிகையுடன் காதல்... நடிகர் வினய் விரைவில் திருமணம்!

    இதற்கிடையே சமந்தா கடந்த ஜூலை மாதம் ட்விட்டரில் தனது பெயரை ‘எஸ்’ என மாற்றியதிலிருந்து, அவர் நாக சைத்தன்யாவை விவாகரத்து செய்யவிருப்பதாக தகவல்கள் வலம் வந்தன. இது வெறும் வதந்தியாகவே முடிந்துவிடும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், கடந்த அக்டோபர் 2-ம் தேதி இருவரும் பரஸ்பரம் மனமொத்து பிரிவதாக அறிவித்தனர். இது ரசிகர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பின்னர் நாக சைத்தன்யாவுடன் இருந்த அனைத்துப் படங்களையும் இன்ஸ்டாகிராமில் இருந்து நீக்கினார் சமந்தா.

    இந்நிலையில் தற்போது நாக சைத்தன்யாவுடனான படத்தை இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார். மஜிலி படத்தின் மூன்று ஆண்டுகளைக் குறிக்கும் வகையில், இன்ஸ்டாகிராம் ஸ்டோரிஸில் நாகசைத்தன்யாவுடனான படத்தை வெளியிட்டுள்ளார் சமந்தா. சமந்தாவும், சைத்தன்யாவும் முக்கிய வேடங்களில் நடித்த தெலுங்கு லவ் - ஸ்போர்ட்ஸ் படமான மஜிலி 2019-ஆம் ஆண்டு ஏப்ரல் 5-ஆம் தேதி வெளியானது.

    தளபதி 66-ல் ராஷ்மிகா மந்தனா, எஸ்.எஸ்.தமன் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

    Samantha shares a picture with Naga Chaitanya for the first time after the separation, Samantha Akkineni, samantha divorce, samantha naga chaitanya divorce, sam chay divorce, samantha separation, actress samantha divorce, samantha akkineni, samantha akkineni movies and tv shows, samantha akkineni age, samantha akkineni children, samantha akkineni and naga chaitanya, samantha akkineni instagram, samantha akkineni family, samantha akkineni father, samantha akkineni religion, சமந்தா விவாகரத்து, சமந்தா நாக சைத்தன்யா பிரிவு, சமந்தா, நடிகை சமந்தா, சமந்தா அக்கினேனி, சமந்தா குடும்பம், சமந்தா நாக சைத்தன்யா, சமந்தா கணவர், சமந்தா இன்ஸ்டாகிராம்
    சமந்தா ஸ்டோரி


    ஏ மாயா சேசவே, மனம், ஆட்டோநகர் சூர்யா ஆகிய படங்களுக்குப் பிறகு சமந்தா - நாக சைத்தன்யாவின் நடிப்பில் வெளியான நான்காவது படமான மஜிலி, திருமணத்திற்குப் பிறகு அவர்கள் இணைந்த முதல் படமும் கூட.

    Thalapathy 66: ராஷ்மிகாவின் ஃபேன் கேர்ள் மொமெண்ட்... வைரலாகும் விஜய்யின் தளபதி 66 பூஜை படங்கள்!

    மஜிலி படத்தில் நாக சைத்தன்யா பூர்ண சந்தர் ராவ் என்ற கதாபாத்திரத்திலும், சமந்தா ஸ்ரவாணி என்ற கதாபாத்திரத்திலும் நடித்திருந்தனர். படம் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Samantha

    அடுத்த செய்தி