Home /News /entertainment /

Samantha: நீங்கள் தான் என் பலம்... நடிகை சமந்தா உருக்கமான பதிவு!

Samantha: நீங்கள் தான் என் பலம்... நடிகை சமந்தா உருக்கமான பதிவு!

சமந்தா

சமந்தா

சாகுந்தலம் திரைப்படம் இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    நடிகை சமந்தாவின் சாகுந்தலம் திரைப்படம் நவம்பர் 4-ம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

    சமந்தா ரூத் பிரபுவின் அடுத்தப் படம் சாகுந்தலம் டோலிவுட்டில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்றாகும். நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, தயாரிப்பாளர்கள் தற்போது படம் குறித்த முக்கியமான அப்டேட்டை வெளியிட்டுள்ளனர். சாகுந்தலம் படத்தின் சுவாரஸ்யமான மோஷன் போஸ்டரை வெளியிட்டு அதன் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. குணா டீம்வொர்க்ஸுடன் இணைந்து தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை குணசேகர் எழுதி இயக்கியுள்ளார். இதையடுத்து சாகுந்தலம் திரைப்படம் நவம்பர் 4, 2022 அன்று வெளியாக உள்ளது.

    சர்வதேச அளவில் புகழ்பெற்ற காளிதாசனின் சமஸ்கிருத நாடகமான ‘அபிஜ்ஞான சாகுந்தலம்’ அடிப்படையில் பிரம்மாண்டமாக இயக்கப்பட்டுள்ள சாகுந்தலம் திரைப்படம் இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.



    பிரபல பாலிவுட் நடிகையிடம் வாய்ப்பை இழந்த சமந்தா?

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    படத்தின் வெளியீட்டு தேதியை ட்விட்டரில் பகிர்ந்த சமந்தா, ”நவம்பர் 4-ம் தேதி வெளியாகிறது. உங்கள் அன்புக்கு நன்றி. எனக்கு எப்போதும் ஆதரவாக இருக்கிறீர்கள்” என்று தெரிவித்துள்ளார்.
    Published by:Shalini C
    First published:

    Tags: Samantha

    அடுத்த செய்தி