Home /News /entertainment /

இதை ரொம்ப மிஸ் பண்ணேன் - நடிகை சமந்தா பதிவு

இதை ரொம்ப மிஸ் பண்ணேன் - நடிகை சமந்தா பதிவு

நடிகை சமந்தா

நடிகை சமந்தா

Samantha : நடிகை சமந்தாவின் இன்ஸ்டாகிராம் பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

    தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக சமந்தா வலம் வருகிறார். சமந்தா முதன் முதலில் தமிழில் விண்ணத்தாண்டி வருவாயா படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானார். அதன் பின்பு விண்ணைத்தாண்டி வருவாயா தெலுங்கு ரீமேக்கில் கதாநாயகியாக அறிமுகமானார். தெலுங்கு மற்றும் தமிழில் தொடர்ந்து படங்கள் நடித்து தற்போது தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வருகிறார்.

    சமந்தா - நாக சைதன்யாவுடனான பிரிவுக்கு பிறகு மிகவும் நொறுங்கிவிட்டதாகவும், இந்த சோகத்தில் இருந்து மீள பல நண்பர்கள் உதவினார்கள் என சில பேட்டிகளில் கூறினார். பெர்சனல் லைஃபில் ஏற்ற,இறக்கத்துடன் இருந்தாலும் சினிமா என்று வந்துவிட்டால் சமந்தாவை அடித்துக்கொள்ள முடியாது என்று தான் கூற வேண்டும். ஆம். ஹிந்தியில் வெளியான ‘தி ஃபேமிலி மேன் 2’ வெப் சீரிஸில் ராஜி என்ற கதாபாத்திரத்தில் வேற லெவலில் நடித்திருப்பார்.இந்த வெப் சீரிஸிற்காக பல விருதுகளையும் பெற்றார்.

    சமீபத்தில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான ‘காத்து வாக்குல இரண்டு காதல்’ படத்தில் நடித்த சமந்தா கதிஜா என்ற கேரெக்டரிற்கு மிகவும் பொருத்தமாக இருந்தார். படங்கள், போட்டோ ஷூட் என எவ்வளவு பிசியாக இருந்தாலும் ஒரு நாள் கூட சமந்தா வொர்க் அவுட் செய்ய தவறுவதில்லை. இந்நிலையில் வொர்க் அவுட் செய்யும் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்துள்ளார். அதில் வொர்க் அவுட் உடையில் இருக்கும் சமந்தா தனது செல்ல நாய்க்குட்டியுடன் இருக்கிறார்.'சீக்கிரமாக எழுந்து தனது செல்லப்பிராணியுடன் நேரம் செலவழிப்பதை மிஸ் செய்தேன்’ என்று கேப்ஷனில் பதிவிட்டுள்ளார்.

    also read : த்ரிஷாவின் அப்பாவை இதுவரை பாத்திருக்கீங்களா? வைரல் புகைப்படம்..



     
     

     

     


    View this post on Instagram


     

     

     

     

    A post shared by Samantha (@samantharuthprabhuoffl)





    சமந்தா தெலுங்கில் நடித்த ‘யசோதா’ திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.மேலும் விஜய் தேவரக்கொண்டாவுடன் இணைந்து குஷி என்ற படத்திலும் சமந்தா நடித்து வருகிறார்.

     
    Published by:Tamilmalar Natarajan
    First published:

    Tags: Actress Samantha

    அடுத்த செய்தி