Home /News /entertainment /

3 நிமிட பாடலுக்கு 5 கோடிக்கும் மேல் வசூலித்த சமந்தா?

3 நிமிட பாடலுக்கு 5 கோடிக்கும் மேல் வசூலித்த சமந்தா?

சமந்தா

சமந்தா

முன்னதாக சமந்தாவுக்கு இந்த பாடலுக்காக 1.5 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது அவர் சுமார் 5 கோடி ரூபாய் சம்பளமாக பெற்றிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

    நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த மாதம் வெளியான ‘புஷ்பா’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தின் பாடல்கள் ஐந்து மொழிகளிலும் நல்ல வரவேற்பை பெற்றது. சமந்தா சிறப்புத் தோற்றத்தில் இடம்பெற்ற பாடல் சர்ச்சையை ஏற்படுத்தினாலும், பரவலான வெற்றியையும் பெற்றது.

    அதன் ஹெச்.டி வீடியோ பாடலுக்காக ஆவலுடன் காத்திருந்தனர் ரசிகர்கள். தமிழில் 'ஊ சொல்றியா' தெலுங்கில் ’ஊ அண்டாவா' என வெளியான அந்தப் பாடல் பல மில்லியன் பார்வைகளை தாண்டிவிட்டன. மொத்தத்தில், அனைத்து மொழிகளிலும் சேர்த்து 75 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை அப்பாடல் பெற்றுள்ளது.

    முன்னதாக சமந்தாவுக்கு இந்த பாடலுக்காக 1.5 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது அவர் சுமார் 5 கோடி ரூபாய் சம்பளமாக பெற்றிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. செய்திகளின்படி, அல்லு அர்ஜுன் சமந்தாவிடம் ‘ஊ அண்டாவா’ பாடலுக்கு ஆடும்படி கேட்டுக் கொண்டதாகவும், அதற்கு திரையில் 3 நிமிடங்கள் தோன்ற, அவர் 5 கோடி ரூபாய்க்கு மேல் கேட்டதாகவும் கூறப்படுகிறது.

    Dhanush: நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்ட தனுஷ்...



    Dhanush Aishwarya Rajinikanth: தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பிரிவால் அதிர்ச்சியடைந்த ரசிகர்கள் - ஆச்சர்யப்படாத நண்பர்கள்!

    ‘புஷ்பா: தி ரைஸ்’ படத்தை சுகுமார் இயக்க, அல்லு அர்ஜுன், ரஷ்மிகா மந்தனா மற்றும் ஃபஹத் பாசில் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார், தமிழில் ‘ஊ சொல்றியா’ பாடலை விவேகா எழுத, ஆண்ட்ரியா ஜெர்மியா பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Actress Samantha, Samantha

    அடுத்த செய்தி