• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • விவாகரத்து அறிவிப்புக்கு பின் சமந்தா ஒப்பந்தமான இரு படங்கள்...!

விவாகரத்து அறிவிப்புக்கு பின் சமந்தா ஒப்பந்தமான இரு படங்கள்...!

சமந்தா

சமந்தா

தெலுங்கில் குணசேகர் இயக்கத்தில் சமந்தா நடித்த சாகுந்தலம் படம் முடிவடைந்துள்ளது. தமிழில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடித்துவந்த காத்து வாக்குல ரெண்டு காதல் படமும் முடியும் நிலையில் உள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
இரு பிரபல தயாரிப்பு நிறுவனங்களின் படத்தில் சமந்தா நடிக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அந்நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன.

கணவர் நாக சைதன்யாவுடனான கருத்து வேறுபாட்டால் தனியாக வாழ்ந்து வந்த சமந்தா சமீபத்தில் தனது பிரிவை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். திருமண முறிவு என்பது அத்தனை எளிதில் கடந்துவிடக் கூடிய பிரச்சனை அல்ல. தங்களுடைய தொழிலில் கவனம் செலுத்துவது ஒன்றே பிரச்சனையிலிருந்து அவர்களை திசை திருப்பும். அந்த வழியை சமந்தாவும் தேர்வு செய்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்திப் படங்களில் வரிசையாக நடிக்க உள்ளார்.

இதில் ஒரு படத்தை தமிழின் பிரபல தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர்ஸ் தயாரிக்கிறது. இதுவொரு நாயகி மையத் திரைப்படம். அறிமுக இயக்குனர் சாந்தரூபன் ஞானசேகரன் இந்தப் படத்தை இயக்குகிறார். விரைவில் இதன் படப்பிடிப்பு தொடங்குகிறது. இது ட்ரீம் வாரியர்ஸின் 30 வது படமாகும்

மற்றெhரு படத்தை தெலுங்கின் பிரபல தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீதேவி மூவிஸ் தயாரிக்கிறது. இது அவர்களின் 14 வது திரைப்படம். ஹரி மற்றும் ஹரீஷ் இணைந்து இந்தப் படத்தை இயக்குகின்றனர். இதுவும் நாயகி மையத் திரைப்படமே. இந்த இரு படங்களும் தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் தயாராகின்றன. ஸ்ரீதேவி மூவிஸின் படம் நவம்பரில் தொடங்குகிறது.



Also read... உன்ன பார்த்த நேரம் மனசு ஆடும் மயிலாட்டம்... ராதிகா ஆப்தேவின் லேட்டஸ்ட் போட்டோஸ்!

இவை தவிர இந்தியில் ஒரு படத்தில் சமந்தா நடிக்க உள்ளார். அதேபோல் தி பேமிலி மேன் இயக்குனர்கள் ராஜ் & டிகேயின் புதிய வெப் தொடர் ஒன்றிலும் சமந்தா நடிக்கயிருக்கிறார்.

தெலுங்கில் குணசேகர் இயக்கத்தில் சமந்தா நடித்த சாகுந்தலம் படம் முடிவடைந்துள்ளது. தமிழில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடித்துவந்த காத்து வாக்குல ரெண்டு காதல் படமும் முடியும் நிலையில் உள்ளது. இவ்விரு படங்களின் வெளியீட்டு தேதிகளும் விரைவில் அறிவிக்கப்பட உள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: