Home /News /entertainment /

நான் எப்போதும் மோடி சப்போர்ட்டர் - சமந்தா ஓபன் டாக்... வைரலாகும் வீடியோ

நான் எப்போதும் மோடி சப்போர்ட்டர் - சமந்தா ஓபன் டாக்... வைரலாகும் வீடியோ

சமந்தா - மோடி

சமந்தா - மோடி

நாட்டை முன்னேற்ற பாதைக்கு அழைத்துச் செல்வார் என நம்புவதாக சமந்தா மனம் திறந்து பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    நடிகை சமந்தா தான் எப்போதுமே மோடி ஆதரவாளர் எனக் கூறிய வீடியோ ட்விட்டரில் பாஜக-வினரால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

    தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்பவர் நடிகை சமந்தா. தென்னிந்திய சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்த இவர், ஃபேமிலி மேன் 2 வெப் சீரிஸில் நடித்த பின்பு இந்திய அளவில் பிரபலமானார். அதோடு புஷ்பா படத்தில் இவர் ’ஊ அண்டாவா’ என்ற பாடலுக்கு ஆடிய நடனம், அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இதற்கிடையே விரைவில் இந்தியில் சமந்தா அறிமுகமாக இருப்பதாகவும் கடந்த சில மாதங்களாக செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன.

    தற்போது அவர், யசோதா, சாகுந்தலம், குஷி ஆகியப் படங்களில் நடித்து வருகிறார். அதோடு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் தளபதி 67 படத்தில் நடிப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

    விவாகரத்து, சக நடிகருடன் நெருக்கம், தயாரிப்பாளருடன் இரண்டாவது திருமணம் - சீரியல் நடிகை மகாலட்சுமி ஆல்பம்!

    இந்நிலையில் சமந்தாவின் பழைய வீடியோ ஒன்று இணையத்தில் வலம் வருகிறது. தான் எப்போதுமே மோடியின் ஆதரவாளர் என்றும், அவர் தலைமையில் இந்தியாவில் நிறைய மாற்றங்கள் ஏற்படும் என்றும், அவர் நாட்டை முன்னேற்ற பாதைக்கு அழைத்துச் செல்வார் என நம்புவதாகவும் சமந்தா மனம் திறந்து பேசிய வீடியோ தான் அது.



    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    தற்போது அந்த வீடியோ இணையத்தில் பாஜக-வினரால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
    Published by:Shalini C
    First published:

    Tags: Actress Samantha, Narendra Modi

    அடுத்த செய்தி