உடல்நலம் தேறிவரும் சமந்தா தீவிரமாக உடற்பயிற்சி செய்து வரும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது. கோலிவுட்டின் மிகவும் பிரபலமான நடிகை சமந்தா சமீபத்தில் மயோசிடிஸ் எனப்படும் தன்னுடல் நோய் எதிர்ப்பு குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்த நோய் ஒருவருக்கு ஏற்பட்டால், அது அவர் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு செல்களை தாக்கி தசைகளையும் வெகுவாக தாக்குகிறது.
மேலும் தாங்க முடியாத வலியையும், வீக்கத்தையும் உண்டாக்கக் கூடும். இதன் காரணமாக இந்த நோயினால் பாதிக்கப்பட்ட நபரின் தசைகள் மிகவும் வலுவிழுந்து காணப்படும். சமந்தா மிகக் கடுமையான உடற்பயிற்சி செய்யும் பழக்கம் உடையவர். ஆனாலும் இந்த நோயினால் பாதிக்கப்பட்டதிலிருந்து உடற்பயிற்சி செய்வதில் கூட பல சிக்கல்களை சந்தித்து இருந்தார்.
உடல் நலனைக் கருத்தில் கொண்டு கடந்த ஆண்டு வெளியான யசோதா படத்துக்காக, தமிழ், தெலுங்கில் தலா 1 பேட்டி கொடுத்து படத்தின் ப்ரமோஷனை முடித்துக்கொண்டார். இதன் ஒரு பகுதியாக சிகிச்சைக்காக சமீபத்தில் அமெரிக்கா சென்றுவந்தார். மேலும் தனது உடல்நிலை பாதிப்பு குறித்து பதிவிட்ட சமந்தா, ''போராடிக்கொண்டே இருங்கள். நீங்கள் இன்னும் பலமாக தயாராவீர்கள். இன்னும் திடமாக மாறி கஷ்டங்களை எதிர்கொள்வீர்கள்'' என்று குறிப்பிட்டிருந்தார்.
யசோதா படத்துக்கு பிறகு நடிகை சமந்தா நடிப்பில் சாகுந்தலம் என்ற படம் உருவாகியுள்ளது. குணசேகர் இயக்கியுள்ள இந்தப் படத்தில் மலையாள நடிகர் தேவ் மோகன் முதன்மை வேடத்தில் நடித்துள்ளார். தயாரிப்பாளர் தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. மணிஷர்மா இந்தப் படத்துக்கு இசையமைக்கிரார். இந்தப் படத்தின் வெளியீட்டு தேதி தற்போது தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
View this post on Instagram
இந்நிலையில் உடல்நலம் தேறிவரும் சமந்தா மீண்டும் உடற்பயிற்சில் தீவிரம் காட்டி வருகிறார். தற்போது தன்னுடைய பயிற்சியாளர் உடன் சமந்தா, ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் புதிய வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actress Samantha