முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / விஜய் சேதுபதியின் ஃபார்ஸி வெப் சீரிஸை புகழ்ந்து தள்ளிய சமந்தா!

விஜய் சேதுபதியின் ஃபார்ஸி வெப் சீரிஸை புகழ்ந்து தள்ளிய சமந்தா!

விஜய் சேதுபதி - சமந்தா

விஜய் சேதுபதி - சமந்தா

இயக்குநர் ராஜ் மற்றும் டிகேயின் 'தி ஃபேமிலி மேன் 2' வெப் சீரிஸில் சமந்தா முக்கிய வேடத்தில் நடித்தார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

விஜய் சேதுபதியின் ஃபார்ஸி வெப் சீரிஸை புகழ்ந்து பாராட்டியுள்ளார் நடிகை சமந்தா.  நடிகர் விஜய் சேதுபதியின் முதல் வெப் சீரிஸ் ஃபார்ஸி பிப்ரவரி 10 அன்று பான் இந்தியா வெளியீடாக வெளியானது. இதனை ‘தி ஃபேமிலி மேன்’ புகழ் ராஜ் மற்றும் டி.கே இயக்கியுள்ளனர். இந்த சீரிஸ் பார்வையாளர்கள் மற்றும் விமர்சகர்களிடமிருந்து அற்புதமான வரவேற்பைப் பெற்று வருகிறது. விஜய் சேதுபதியுடன் ஷாஹித் கபூர் மற்றும் ராஷி கண்ணா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்தத் தொடர் ஒரு ஆக்‌ஷன் த்ரில்லராக உருவாகியுள்ளது. இதற்கிடையில், நடிகை சமந்தா இந்தத் தொடரால் பெரிதும் ஈர்க்கப்பட்டதாகத் தெரிகிறது.

ஃபார்ஸி குறித்து தனது எண்ணங்களை பகிர்ந்துக் கொண்டார் சமந்தா. அதில், “பொழுதுபோக்கு மற்றும் மிகவும் ஃபன்னாக உள்ளது. சிக்கலான கதாபாத்திரங்கள் மற்றும் உறவுகள். ஒவ்வொருவரின் நடிப்பையும் மிகவும் விரும்பினேன். நடிகர்கள் தேர்வு மிகவும் நன்றாக இருந்தது” என்று குறிப்பிட்டிருந்தார்.

'பார்ஸி' சீரிஸில் கே.கே.மேனன், ரெஜினா கசாண்ட்ரா, அமோல் பலேகர் மற்றும் புவனன் அரோரா ஆகியோரும் நடித்துள்ளனர். "எழுத்து, மேக்கிங், இசை, கொலையாளி உரையாடல்கள், குறிப்பாக அனைத்து நகைச்சுவையான ஒன்-லைனர்கள், ராஜ் மற்றும் டிகே-விடம் எதிர்பார்த்த அனைத்தும் உள்ளது" என்றும் சமந்தா கூறியிருந்தார்.

இயக்குநர் ராஜ் மற்றும் டிகேயின் 'தி ஃபேமிலி மேன் 2' வெப் சீரிஸில் சமந்தா முக்கிய வேடத்தில் நடித்தார். அது சூப்பர்ஹிட் தொடராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actor Vijay Sethupathi, Actress Samantha