• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • சர்வதேச திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய வேடத்தில் நடிக்கும் சமந்தா!

சர்வதேச திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய வேடத்தில் நடிக்கும் சமந்தா!

சமந்தா

சமந்தா

பிலிப் ஜானுடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருக்கும் சமந்தா, கடைசியாக 2009 இல் 'இ மாய சேஷவ்' படத்துக்காக ஆடிசனில் கலந்து கொண்டதாகவும், 12 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் அதே பதட்டத்தை ஆடிசனின் போது அனுபவப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
கணவரை பிரிந்த பின் திரைப்படங்களில் முழுக்கவனத்தை செலுத்தி வருகிறார் சமந்தா. தமிழ், தெலுங்கில் தயாராகும் இரு நாயகி மையப் படங்களில் அவர் நடிக்கிறார். இந்தி திரைப்படம், வெப் தொடர்களிலும் நடிக்க இருக்கிறார். அத்துடன் ஆங்கிலப் படம் ஒன்றிலும் நடிக்கிறார். பிரபல இயக்குனர் பிலிப் ஜான் இந்தப் படத்தை இயக்குகிறார்.

2004 இல் வெளியான, திமேரி என்.முராரி எழுதிய 'அரேன்ஜ்மென்ட்ஸ் ஆஃப் லவ்' என்ற நாவலை அடிப்படையாக வைத்து அதே பெயரில் ஒரு படத்தை பிலிப் ஜான் இயக்குகிறார். இதில் பிரதான வேடத்தில் சமந்தா நடிக்கிறார். இந்த நாவலில் வரும் இளம் பெண் இருபால் உறவு கொள்கிறவராக வருவார். நாவல் வெளியான போது இந்த கதாபாத்திரம் பிரதானமாகப் பேசப்பட்டது. அந்த கதாபாத்திரத்தில் சமந்தா நடிக்கிறார்.

பிலிப் ஜானுடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருக்கும் சமந்தா, கடைசியாக 2009 இல் 'இ மாய சேஷவ்' படத்துக்காக ஆடிசனில் கலந்து கொண்டதாகவும், 12 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் அதே பதட்டத்தை ஆடிசனின் போது அனுபவப்பட்டதாகவும் கூறியுள்ளார்.



 




View this post on Instagram





 

A post shared by Samantha (@samantharuthprabhuoffl)






BAFTA விருது பெற்றுள்ள பிலிப் ஜான் வெற்றிகரமான தொலைக்காட்சி தொடர்களை இயக்கியவர். உலக அளவில் பிரபலமான Downton Abbey தொலைக்காட்சி தொடரை இயக்கியவரும் இவரே.

Also read... மாநாடு பாஸிடிவ் விமர்சனங்களால் கேரளாவில் திரையரங்குகள் அதிகரிப்பு!

இது தனது பேவரைட் தொடர் என சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பதிவில் குறிப்பிட்டுள்ளார். அவரது இயக்கத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பிற்காக அவர் பிலிப் ஜானுக்கு நன்றியும் கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: