முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / மணமுறிவுக்குப் பிறகு இறந்து விடுவேன் என நினைத்தேன் - சமந்தா உருக்கம்

மணமுறிவுக்குப் பிறகு இறந்து விடுவேன் என நினைத்தேன் - சமந்தா உருக்கம்

சமந்தா

சமந்தா

காதல் கணவர் நாக சைத்தன்யாவை தான் பிரிவதாக, கடந்த அக்டோபர் 2-ம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் சமந்தா.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

கணவரை பிரிந்த பிறகு மனம் நொந்து தான் இறந்து விடுவேன் என நினைத்ததாக நடிகை சமந்தா தெரிவித்துள்ளார்.

நடிகை சமந்தா தமிழ் மற்றும் தெலுங்கில் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் தமிழில் விஜய், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன், விஷால் உள்ளிட்டவர்களின் படத்தில் நடித்து, ரசிகர்களின் மனதில் ஆழமான இடத்தைப் பிடித்திருக்கிறார்.

தமிழைப் போலவே தெலுங்கிலும் முன்னணி நடிகர்களுடன் நடித்து பல வெற்றி படங்களைக் கொடுத்துள்ளார். கடந்த 2017-ஆம் ஆண்டு பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்ட சமந்தா, அதன் பிறகும் சினிமாவில் தொடர்ந்து நடித்து வந்தார்.

பொதுவாக திருமணத்துக்குப் பிறகு நடிப்புக்கு முழுக்குப் போடும் நடிகைகள் மத்தில் சமந்தா தொடர்ந்து முன்னணி நடிகையாக நடித்து வந்தது ரசிகர்கள் மத்தியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் காதல் கணவர் நாக சைத்தன்யாவை தான் பிரிவதாக, கடந்த அக்டோபர் 2-ம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் சமந்தா. இது திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தற்போது இது குறித்து மனம் திறந்துள்ள சமந்தா, “எனக்கு தெரியும், நான் இனிமேல் தான் என் வாழ்க்கையை வாழப்போகிறேன். எனது தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் போது என்னுடைய மனவலிமையை நினைத்து ஆச்சரியப்படுகிறேன். மனதளவில் நான் மிகவும் பலவீனமானவள். எங்கள் பிரிவுக்கு பிறகு நான் மனம் நொறுங்கி இறந்து விடுவேன் என நினைத்தேன். ஆனால் நான் இவ்வளவு வலிமையாக இருப்பேன் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Actress Samantha