• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • ஷாருக்கான் படத்தில் நயன்தாராவுக்கு பதில் சமந்தா?

ஷாருக்கான் படத்தில் நயன்தாராவுக்கு பதில் சமந்தா?

சமந்தா

சமந்தா

சமந்தா ஏற்கனவே அட்லீயின் இயக்கத்தில் தெறி மற்றும் மெர்சல் ஆகியப் படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கிறார்.

  • Share this:
    ஷாருக்கான் படத்தில் நயன்தாராவுக்கு பதில், சமந்தா நடிக்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக இருந்த அட்லி, ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் இயக்குனரானார். அடுத்து விஜய்யை வைத்து தெறி படத்தை இயக்கியவர் தொடர்ந்து மெர்சல், பிகில் என ஹாட்ரிக் அடித்தார்.

    தற்போது அவர் பாலிவுட் நடிகர் ஷாருக்கானை வைத்து, இந்தியில் படம் இயக்கி வருகிறார். அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் போதைப்பொருள் வழக்கில் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் கைதானார். அவருக்கு ஜாமீன் கிடைக்காததால், மன உளைச்சலில் இருக்கும் ஷாருக்கான், படப்பிடிப்பில் கலந்துக் கொள்ளாமல் இருக்கிறார்.

    இதனால் ஷாருக்கானை வைத்து அட்லீ இயக்கி வரும் படத்தின் படப்பிடிப்பு தாமதமாகி வருகிறது. இதையடுத்து கால்ஷீட் பிரச்னை ஏற்படுவதால், அந்தப் படத்திலிருந்து விலக நயன்தாரா முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் ஷாருக்கானுக்கு ஜோடியாக, நயன்தாராவுக்கு பதில் சமந்தா நடிக்கவிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

    சமந்தா ஏற்கனவே அட்லீயின் இயக்கத்தில் தெறி மற்றும் மெர்சல் ஆகியப் படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கிறார். தற்போது கணவர் நாகசைத்தன்யாவுடன் விவாகரத்தை அறிவித்துள்ள அவர், தொடர்ந்து தனது நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். ஆகையால் இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் அதை அவர் தவற விட மாட்டார் என்றே தெரிகிறது. இருப்பினும் அதிகாரப்பூர்வ தகவலுக்காக காத்திருப்போம்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: