ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

''படுக்கையறையில் கூட'' நாக சைத்தன்யாவின் முதல் மனைவி குறித்து பேசிய சமந்தா.. வைரலாகும் வீடியோ!

''படுக்கையறையில் கூட'' நாக சைத்தன்யாவின் முதல் மனைவி குறித்து பேசிய சமந்தா.. வைரலாகும் வீடியோ!

சமந்தா மற்றும் நாக சைத்தன்யா.

சமந்தா மற்றும் நாக சைத்தன்யா.

கடந்த 2017 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை காதலித்து சமந்தா திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்குப் பிறகும் சமந்தா திரைப்படங்களிலும், வெப் தொடர்களிலும் நடித்து வந்தார்.

  • News18
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

நடிகர் நாக சைத்தன்யா நேற்று தனது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில் அவரது முன்னாள் மனைவி குறித்து சமந்தா பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது.

கடந்த 2017 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை காதலித்து சமந்தா திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்குப் பிறகும் சமந்தா திரைப்படங்களிலும், வெப் தொடர்களிலும் நடித்து வந்தார்.

இந்நிலையில் நாகசைதன்யாவும், சமந்தாவும் தாங்கள் பிரிவதாக தத்தம் சமூக வலைதள பக்கங்களில் அறிவித்தனர். இதுகுறித்து நாகசைதன்யா இன்ஸ்டாகிராம் பதிவில், ‘நீண்ட ஆலோசனைக்குக்குப் பிறகு கணவன் மனைவியாக உள்ள நானும் சமந்தாவும் பிரிந்து தனித்து செல்வதற்கு முடிவு செய்துள்ளோம். பத்துவருடங்களுக்கு மேலாக நண்பர்களாக இருப்பதற்கு எங்களுக்கு வாய்ப்பு கிடைத்தது. இந்த கடினமான நேரத்தில் நண்பர்கள், நலம் விரும்பிகள், ஊடகங்கள் உறுதுணையாக இருக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்’ என்றும் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் குறிப்பிட்டிருந்தார். இதற்கு ரசிகர்கள் பலர் தங்களது மன வேதனையை வெளிப்படுத்தினர்.

இந்நிலையில் நேற்று நாக சைத்தன்யா தனது பிறந்த நாளை கொண்டாடினார். நாக சைத்தன்யா குறித்து சமந்தா பேட்டி ஒன்றில் பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அதில் நாக சைத்தன்யாவின் முதல் மனைவி குறித்து சமந்தா பேசியுள்ளார். அந்தப் பேட்டியில் செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்து பேசிய சமந்தா, தன்னுடைய படுக்கையறையில் நாக சைத்தன்யாவின் முதல் மனைவி தலையணை தான் என்று குறிப்பிட்டிருந்தார். தான் நாக சைத்தன்யாவை கிஸ் செய்வதென்றாலும் தங்களுக்கு இடையில் தலையணை இருக்கும் என்றும் சமந்தா தெரிவித்திருந்தார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also read... இலங்கை... தமிழ்... ரொம்ப டர்ட்டி ஆக்க பாக்குறீங்க - ஜனனியிடம் விளக்கமளிக்கும் விக்ரமன்!

சமீபத்தில் சமந்தா மயோடிசிஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதை, மருத்துவமனையில் சிகிச்சை பெறும் புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களுக்கு அறிவித்திருந்தார். இதனையடுத்து அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். பின்னர் யஷோதா திரைப்பட ப்ரோமஷனுக்காக நேர்காணல் ஒன்றில் பேட்டி அளித்திருந்தார்.

அவர் உடல் நிலை தேறிவிட்டது என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மீண்டும் உடல் நலக்குறைவு காரணமாக ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இருப்பினும் எதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Actress Samantha