Home /News /entertainment /

யசோதா படத்தில் வித்தியாசமான வேடத்தில் சமந்தா!

யசோதா படத்தில் வித்தியாசமான வேடத்தில் சமந்தா!

சமந்தா

சமந்தா

இந்தப் படத்தில் சமந்தா நர்சாக நடிப்பதாக கூறப்படுகிறது. இதுவரை அவர் நர்சாக நடித்ததில்லை. மிகவும் பவர்ஃபுல்லான வேடம் என இயக்குனர் தெரிவித்துள்ளனர்.

யசோதா படத்தில் இதுவரை நடித்திராத வேடத்தில் சமந்தா நடிக்க உள்ளார். இந்தப் படம் சமந்தாவின் முதல் பான் - இந்தியா திரைப்படமாக இருக்கும்.

தி பேமிலிமேன் 2 தொடருக்குப் பிறகு இந்திய அளவில் அறியப்படும் நடிகையாகியுள்ளார் சமந்தா. அதை அறுவடை செய்யும் விதமாக அவரது அடுத்தப் படம் யசோதா தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது. ஹரி மற்றும் ஹரீஷ் படத்தை இயக்குகின்றனர்.

இந்தப் படத்தில் சமந்தா நர்சாக நடிப்பதாக கூறப்படுகிறது. இதுவரை அவர் நர்சாக நடித்ததில்லை. மிகவும் பவர்ஃபுல்லான வேடம் என இயக்குனர் தெரிவித்துள்ளனர். படத்தின் முதல் ஷெட்யூல்ட் வெற்றிகரமாக கேரளாவில் முடிந்துள்ளது. யசோதா,  நாயகி மையத் திரைப்படம். இதனை சிவலெங்கா கிருஷ்ணபிரசாத் தயாரிக்கிறார். படம் குறித்து பேசியிருக்கும் அவர், "தி பேமிலிமேன் 2 க்குப் பிறகு சமந்தா பான் - இந்தியா அளவில் கவனத்தை பெற்றிருக்கிறார்.

இதையும் படிங்க.. லாரி டிரைவரின் மகன் நான்.. செம்பருத்தி சீரியல் நடிகரின் உருக்கமான கதை!

அதற்கேற்ப இந்தப் படம் இருக்கும். இதுவொரு த்ரில்லர் திரைப்படம். வித்தியாசமாக அனைத்து ஆடியன்ஸையும் கவரும் விதத்தில் இருக்கும்" என கூறியுள்ளார்.

இதையும் படிங்க.. பிக் பாஸ் நிகழ்ச்சியை பின்னுக்கு தள்ளிய முதல் சன் டிவி சீரியல்!

எம்.சுகுமார் யசோதாவுக்கு ஒளிப்பதிவு செய்ய, மணிசர்மா இசையமைக்கிறார். 2022 மார்ச் மாதத்துக்குள் படப்பிடிப்பை முடித்து 2022 ஏப்ரலில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Sreeja
First published:

Tags: Actress Samantha, Kollywood

அடுத்த செய்தி